கால்நடை வளர்த்த பட்டதாரி பெண்ணுக்கு, கிடைத்தது அரசாங்க வேலை - மனசுவைத்தார் மஹிந்த
கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார்.
கலஹா - பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண்ணே, பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்.
குறித்த பெண்ணின் வீடு மிகவும் பழமையானதாகவும், அடிப்படை வசதிகளற்றதாகவும் காணப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் குப்பி விளக்குகளை வைத்துக்கொண்டே கல்வி நடவடிக்கைகளில் ஈடுப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனது இளங்கலை சான்றிதழை வீட்டின் சுவரில் தொங்கவிட்டுள்ள குறித்த பெண், கணவனுக்கு உதவியாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
தொழில் பெறுவதற்காக பல பரீட்சைகளை மேற்கொண்டிருந்த நிலையிலும் அவருக்கு எந்த தொழிவாய்ப்பும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை உயர் கல்வி படிப்பதற்காக தன் கணவர் செலவுகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதன்மூலம் எந்தவித பிரதிபலனும் கிடைக்கவில்லை. ஆனால் கணவனுக்கு உதவ வேண்டும் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
என்னுடைய கல்வியை வைத்து கணவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் அவருடைய தொழிலுக்காக என்னால் உதவ முடியும் என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய வலியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே சுவரில் பட்டம் பெற்ற சான்றிதழை தொங்கவிட்டுள்ளதாக குறித்த பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2
பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் ஒருவர் கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வரும் நிலை குறித்து அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியதனை தொடர்ந்து பலருக்கு மத்தியில் இந்த விடயம் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகியது.
இந்த நிலையில் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறித்த பெண்ணுக்கு அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
அவருடைய பரிந்துரைக்கமைய அந்த அமைச்சின் தலைவர் பேராசிரியர் சானக அத்துகோரலவினால், அந்த பட்டதாரியான சாலிக்க நவோதனி பெர்ணான்டோவுக்கு தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையில் ஆய்வாளர் 111 தர பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தொழிலுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு அண்மையில் அந்த அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
Post a Comment