Header Ads



அப்பம் கொடுத்துவிட்டு, ஆட்சியைக் கவிழ்ப்பேன் என அடித்துக்கூறிய மஹிந்த

தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இருப்­பினும் அர­சாங்­கத்தின் தற்­கால செயற்­பா­டு­களை பார்க்­கும்போது நிலைமை மாறி­விடும் வாய்ப்­புள்­ள­தா­கவே தெரி­கின்­றது. எனவே 2017 ஆம் ஆண்­டிற்குள் இந்த ஆட்­சியை மாற்­றி­ய­மை­ப்பதே எனது நோக்­க­மாகும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவித்தார்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் தற்­போது முரண்­பா­டுகள் முற்­றி­யுள்­ளன. எனவே இவ்­வாறு ஒரு அர­சாங்­கத்­தினை கொண்டு நடத்த முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

இலங்­கை­யி­லுள்ள வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொழும்பில் சந்­தித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்,

கேள்வி: 19 ஆவது திருத்­தத்தில் ஒருவர் இரு முறைகள் மாத்­தி­ரமே ஜனா­தி­ப­தி­யாக தெரி­வாக முடியும் என்று கூறப்­ப­டு­கின்­றது அவ்­வா­றாயின் அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­யாது நீங்கள் மீண்டும் அரச தலை­வ­ராக முடி­யாதா?

பதில்: இந்­நாட்டில் மீண்டும் ஒரு அரச தலை­வ­ராக மாற­வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. இருப்­பினும் அரச தலை­வ­ரா­க­வி­டினும் என்னாள் நாட்­டினை ஆட்சி செய்ய முடியும்.

கேள்வி: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் சேவை­யாற்ற வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கினால் அதற்கு உங்­களால் முகம்­கொ­டுக்க முடி­யுமா?

பதில்: தற்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் 1970 ஆம் ஆண்­டி­லி­ருந்து நன்­க­றிந்த ஒரு­வ­ருடன் சேவை­யாற்­று­வதில் எனக்கு எந்த சிக்­கலும் இல்லை. அவ்­வாறு இணைந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைமை வந்தால் நான் முன்­வைக்கும் நிபந்­த­னை­களை அவர் ஏற்­றுக்­கொண்டால் மாத்­தி­ரமே இணைந்து செயற்­ப­டுவேன்.

அதேபோல் அடுத்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் போது சுதந்­திர கட்சி பிள­வு­பட்டு போட்­டி­யிட்டால் வாக்­குகள் பிரிந்து செல்லும். எனவே அதன் பலனை ஐக்­கிய தேசிய கட்­சியே அடையும். 

கேள்வி: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து உங்கள் நிலைப்­பாடு?

பதில்: புதிய அர­சி­ல­மைப்பு உரு­வாக்க குழுவின் செயற்­பா­டுகள் பற்றி மாத்­தி­ரம்தான் தற்­போது வரையில் பேசப்­ப­டு­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சாங்கம் தெளி­வான தக­வல்கள் எவற்­றையும் வெளி­யி­ட­வில்லை.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அர­சி­ல­மைப்பு குறித்து கருத்து வெளி­யிட்டால் மாத்­தி­ரமே அது தொடர்பில் பேச முடியும். எவ்­வா­றா­யினும் அர­சி­ல­மைப்பு மாற்றம் ஏற்­ப­டுமா என­்பது சந்­தே­கத்­திற்கு இட­மா­கவே உள்­ளது.

கேள்வி: சீனா­விற்கு காணி வழங்­கி­யுள்­ளமை தொடர்பில் என்ன நிலைப்­பாடு?

பதில்: சீனா­விற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்­கு­வது தொடர்பில் எனக்கு உடன்­பா­டுகள் இல்லை. அது தொடர்பில் குறித்த சீன நிறு­வ­னத்­திற்கும் நான் தெரி­வித்­துள்ளேன். எனது காலத்தில் வழங்­க உடன்பட்ட 750 ஏக்கர் காணியை மாத்­தி­ரமே வழங்­கு­வதே சிறந்­தாகும்.   

மேலும் எமது அர­சாங்­கத்தின் காலப்­ப­கு­தியில் சீன நீர்­மூழ்கி கப்பல் இலங்­கைக்கு வந்­த­தை­யிட்டு அதிருப்தி வெளி­யிட்ட இந்­தியா தற்­போது மெள­னித்­துள்­ளது. எனது ஆட்­சியில் இடம்­பெற்ற தவ­று­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக குரல் எழுப்­பிய இந்­தியா தற்­போது மெளனம் சாதிப்­பதன் பின்­னணி திரு­கோ­ண­மலை துறை­முகம் அவர்கள் வசா­மா­கி­யுள்­ள­மை­யாகும்.

கேள்வி: இந்­திய பாது­காப்பு ஆலோ­சகர் இறுதி யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­ய­தாக கூறி­யுள்ளார். அது குறித்து கூறுங்கள்?

பதில்: இந்­தியா யுத்­த­கா­லத்தில் இலங்­கைக்கு உத­வி­யி­ருந்­தமை தொடர்பில் பல­முறை குறிப்­பிட்­டுள்ளேன். இருப்­பினும் தமிழ் நாட்டில் குழப்பம் ஏற்­ப­டக்­கூடும் என்­பனால் இந்­தியா இது குறித்து பேசு­வதை குறைத்­தி­ருந்­தது. 

கேள்வி: அவ்­வாறு உங்­க­ளுக்கு உத­விய இந்­தியா பிற்­கா­லத்தில் தமது நிலைப்­பாட்­டினை ஏன் மாற்­றிக்­கொண்­டது?

பதில்: சில தவ­றான புரி­தல்கள் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லாவிடின் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகியிருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் இலங்கை ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அப்பம் விருந்தொன்றை மஹிந்த வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.