Header Ads



ஜெயலலிதா மறைவு, தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கை


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவுகூர்கிறது!

கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான்.

பொதுவாக ஒருவர் மரணிக்கும் போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும் பின்னர் மற்ற தலைவருக்கும் இதே புகழ்மாலைகளைச் சூடுவதும் வழக்கமாக நாம் பார்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

முஸ்லிம்களைப் பொருத்தவரை இறைத்தூதர்கள் எனும் நபிமார்கள் அதிகம் மரியாதை செலுத்தத் தக்கவர்களாவர். அப்படி இருந்தும் இறைத்தூதர்களை எல்லை மீறிப் புகழ்வதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் யாருடைய மரணத்தின் போதும் எல்லை மீறியோ, மிகைப்படுத்தியோ, பொய்யான வர்ணனை கொண்டோ புகழ்வதில்லை. எதார்த்தமான உண்மைகளை மட்டுமே சொல்லி வருகிற இயக்கமாகும்.

எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்கள் புகழுக்காகவும், உலகில் பலவித ஆதாயங்களை அடைவதற்காகவும் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தன்னலம் பாராமல் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்வாதியும் இன்றைய உலகில் இல்லை. இதில் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. அண்ணா, காமராஜர், எம்ஜியார் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கானவர்கள் அல்லர்.

ஒரு அரசியல்வாதியாக அவர் செய்த செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் என்ன செய்தார் என்பதை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

3 comments:

  1. அழகான அறிவுரை - அதுவும் ஓரிரு வார்த்தைகளில்.

    அல்ஹம்து லில்லாஹ்!

    ReplyDelete
  2. எங்கேயும் எதிலும் இஸ்லாத்தையும் அதன் எழிய தன்மையையும் எடுத்தியம்ப முடியும் என்பாதற்கான - ஒரு நன்றி நவிலல் சந்தர்ப்பம்.

    நன்றி தெரிவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை இஸ்லாத்தை எத்திவைக்கப் பயன்படுத்தி இருப்பது - இதுதான் அறிவுடமையின் அடையாளம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.