'பொதுபல சேனாவை கட்டுப்படுத்துவது பற்றி, அறிந்து வைத்திருக்கிறேன்' - மகிந்த
பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு அளுத்கமவில் நடந்த மோதலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்து போனதை தான் நேற்றுதான் அறிந்து கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தமது அரசாங்கத்தை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பு, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம் மக்களை தாக்கி திட்டமிட்டு அவர்களை தன்னிடம் இருந்து பிரித்ததாகவும் அவர் பொதுபல சேனா அமைப்பின் மீது குற்றம் சுமத்தியதோடு, தான் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை கட்டுப்படுத்தும் விதம் பற்றி தான் அறிந்து வைத்திருப்பதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அவரது ஆட்சிக்காலத்தில் இப்படியான அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமைக்கான காரணம் என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி தன்னுடைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
Post a Comment