Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக மைத்திரி..?

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வில்பத்து தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள – வனவிலங்குகள் திணைக்களத்தின் கீழ் இல்லாத காடுகளையும், இந்த வனவிலங்குகள் வலயத்தின் கீழ் கொண்டு வருமாறும்  பணித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும்  சுற்றுச்சூழல் அமைச்சுக்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் நேற்று நடத்திய சிறப்புக் கூட்டத்திலேயே ர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன் வில்பத்து உள்ளிட்ட வனப்பகுதிகளை பிந்திய நவீன முறைகளைப் பயன்படுத்தி வானில் இருந்து கண்காணிக்கும் பொறிமுறைகளை உருவாக்குமாறும்,  அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், காடுகளை அழிப்பவர்கள் மீது அவர்கள் எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு

ஜனாதிபதி மைத்திரியின் அண்மைக்கால போக்குகள் பற்றி முஸ்லிம் சமூகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஆச்சரியத்தையும் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் பொது எதிரியாக, சட்டத்தை மதியாவராக அடையாளம் காணப்பட்ட ஞானசாராவை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்தமை, பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து பேசியமை, அப்போது ஞானசாரா முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் அதை கேட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தமை, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அதனை சகல ஊடகங்களுக்கு அனுப்பியமை.

இதற்கு அடுத்ததாக தொல்பொருள் ஆராய்ச்சி பிரதேசங்கள் என சுயமாக பிரகடனப்படுத்தப்ட்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பாரம்பரிய பகுதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி பகுதியாக பிரகடனம் செய்வதற்கு பின்னணியாக செயற்பட்டமை.

மேலும் வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களையும் இலக்குவைத்து தற்போது அங்கும் தனது மறைமுக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி.

மேற்சொன்ன 3 நடவடிக்கைளும் முஸ்லிம்களுக்கு எதிரான ஜனாதிபதியின் மறைமுக காய் நகர்த்தல்களை வெளிப்படுத்தி நிற்கிறது..!

4 comments:

  1. Muslim should start to make prayers against to oppressors who plot to harm us.

    We lived peacefully in this land supporting all the governments, who ever comes to power. But if they oppress us due to any agenda.. LET us Ask the GOD who created them and us... to show his power against to those oppressors and protect the people who love peace of this country.

    ReplyDelete
  2. இவன்னொரு துவேச நாய்,இவன் ஜனாதிபதியாக முன்பு முஸ்லிம்களுடன் எந்தவொரு நட்பும் வைத்திருந்தார் என்ற செய்தி எங்கும் காணவில்லை.எடு எப்படியோ இவண்ட காலத்தில நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாமல் செய்தால் சரி.

    ReplyDelete
  3. Dear brothers,

    Pls let's keep our words in respectful manners. Even though Mr. President deviate from his promiss, lets show objection through respectable manner while respect others. It is not good to call president in irrespective manner.

    Thanks.

    ReplyDelete
  4. He is trying to win the provincial council election, pleasing the majorities but he is counting the days.

    ReplyDelete

Powered by Blogger.