Header Ads



வெளிநாட்டு இலங்கை முஸ்லிம்களிடம், பலமான 'டயஸ்போறா' அவசியம் - சுவிஸில் ஆசாத்சாலி வலியுறுத்து

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். இதனை தவிர்ப்பதற்கு வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம்களிடையே பலமிக்க ஒரு டயஸ்போறா அவசியமாகுமென தேசிய ஐக்கிய முன்னணியில் தலைவர் ஆசாத் சாலி தெரிவித்தார்.

சுவிஸ் - சிலீரன் மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பள்ளிவாசல் தலைவர் ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசாத் சாலி தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து நேரடியாக கூறிவருகிறேன். ஜனாதிபதி விட்ட 3 பிரதான தவறுகளை அவருடைய முகத்திற்கே கூறினேன். அதற்கு அவர் தான் என்ன செய்ய என பதில் கேள்வியெழுப்பினார்.

முஸ்லிம்கள் மாத்திரமல்ல, நாட்டு மக்களும் இந்த நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மஹிந்தவின் காலத்தில் 500 அளவிலான முஸ்லிம் விரோதச் செயற்பாடுகள் நடைபெற்றன. இதுபற்றிய முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. தற்போது இந்த நல்லாட்சி வந்து 2 வருட காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான 250 க்கும் அதிகமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதுபற்றிய முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இந்நிலை தொடரலாம். இதனை தடுக்க வேண்டுமாயின் வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம்களிடையே ஒருமித்த பலம் கட்டமைக்கப்பட்டு, பலம்மிக்க டயஸ்போறா ஒன்று அவசயிம். சுவிஸ் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அமைந்துள்ளது. எனவே சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் இதற்கு உயர்ந்த பங்களிப்பை வழங்கமுடியும். இந்த டயஸ்போறா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க உதவும். இதன்மூலம் சுவிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும். உடனடியாக டயஸ்போறா உருவாக்க வேண்டும் என்றார்.






1 comment:

Powered by Blogger.