Header Ads



'இலங்கை முஸ்லிம்கள், சிரியாவுக்காக பொங்குதல்' (தமிழனுக்கு, தமிழன் பதில்)


-Kalai Marx-

அடுப்பு சட்டியை பார்த்து நீ கருப்பு என்று சொன்னதாம்...
முஸ்லிம் இனவாதிகளை விமர்சிக்கும் தன்னிலை மறந்த தமிழினவாதிகள்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டித்து எழுதிய இலங்கை முஸ்லிம்கள் எத்தனையோ பேருண்டு. உதாரணத்திற்கு, ரிஷான் ஷெரிப் என்ற ஊடகவியலாளர் தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தார். அப்படி இருக்கையில், "முஸ்லிம் மக்கள் கண்டிக்கவில்லை" என்பதாக பரப்புரை செய்வது உள்நோக்கம் கொண்டது. 

ஆஹ்... அது வந்து... முஸ்லிம் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் கண்டிக்கவில்லை என்று சொல்வார்கள். இனவாதம், தேசியவாதம், மதவாதம் போன்ற அரசியல் சித்தாந்தங்கள், மனிதர்களை பிரித்து வைப்பதை குறிக்கோளாகக் கொண்டு உருவானவை. தனது சொந்த இனம், சொந்த மதம் மட்டுமே முக்கியமானது என்று போதிப்பவை. 

இன உணர்வும், மத உணர்வும் கொண்டவர்களே சிறந்தவர்கள் என்று மூளைச் சலவை செய்து வருகின்றன. இந்த விடயத்தில் முஸ்லிம் இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் ஒரே கடமையை தான் செய்கின்றனர். இலங்கையில் தமிழ் மக்கள் எல்லோரும் இனவாதிகள் அல்ல. அதே மாதிரி, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகளும் அல்ல. ஆனால், இனவாத, மதவாத சக்திகளுக்கு உள்ளூர் முதலாளிகள் பணமாக வாரி வழங்குவதால், தமது கருத்துக்களை மக்கள் மீது திணிக்கும் வல்லமை பெற்றுள்ளனர். 

"முள்ளிவாய்க்கால் செவ்வாய்க் கிரகத்தில் இருந்ததால் முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை" என்று அறச்சீற்றம் கொள்ளும் இவர் எதையெல்லாம் கண்டுகொண்டார்? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முன்பு நடந்தேறிய, ஆப்கான் இனப்படுகொலை, ஈராக் இனப்படுகொலை என்று எதையும் இவர் தனது வாழ்க்கையில் கண்டுகொள்ளவில்லை. 

இந்த அறச்சீற்ற போராளி விழுந்து விழுந்து ஆதரிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் போன்ற தமிழர் அமைப்புகளும் உலகில் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆப்கான் போர், ஈராக் போர் நடந்த நேரம், அவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போதெல்லாம் தேசியத் தலைவர் பிரபாகரனும், புலிகளும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், ஆப்கானிஸ்தானும், ஈராக்கும் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கின்றதாம்...!

1 comment:

  1. கொழும்பு வீதிகளில் பிரபாகரன் குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்தானே அப்போது எந்த தமிழ் தீவிரவாதியாவது வாய் திறந்தானா? முள்ளிவாய்க்காலில் அப்பாவிகள் இறந்தனர் அதில் கருத்து வேறுபாடு இல்லை ஆனால் அதே முள்ளிவாய்க்காலில் ஒரு மோசமான தீவிரவாத கும்பல் புதைக்க உடல் கூட கிடைக்காமல் மண்ணோடு மண்ணானதை அந்த தீவிரவாதிகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் தங்கள் சந்தோஷங்களை வெளிப்படுத்தியதில் என்ன தவறு? தங்கள் சுயநலத்திற்காக தமிழ் மக்களையே வெளியேற விடாமல் அடைத்துவைத்த புலி தீவிரவாதிகளே இத்தனை இழப்பிற்கும் பிரதான காரணம். அப்படி பார்த்தல் தமிழன் புலி தீவிரவாதிகளை தான் முதலில் செருப்பால் அடிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.