முஸ்லிம்களுக்கு எதிராக, விஜயதாசாவின் மறைமுக நிகழ்ச்சி நிரல்..!
ஏ எம் எம் முஸம்மில் ( B A Hons)
சுமண , மற்றும் ஞான சார எனும் நிபந்தனையுடன் நீதிமன்ற பிணையில் உள்ள காவியுடை தரித்த ஐ ஆர் சி காரர்கள் இருவரை நேரில் சந்திக்கச் சென்று அவர்களை சுத்தப்படுத்த முயற்சிசெய்த , நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நீதி மன்ற செயலாளரின் நடவடிக்கைகளுக்கு நேர்மாற்றமாக இருப்பதால் இலங்கை நீதித் துறை ஆட்டங் கண்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற நிபந்தனைகளை துச்சமாக மதித்து செயற்படுவதுடன் , தற்போது நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் நடவடிக்கைகளின் காரணமாக கைது செய்யப் பட்டு நிபந்தனைகள் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள சந்தேக நபர்களுடன் ஒன்றிணைந்து ஊடக அறிக்கைகளை வெளியிடும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வின் செயற்பாடுகளால் நேரடியாகவே இந் நாட்டின் சட்ட ஒழுங்குகளும் நீதித் துறையும் அவமானப் படுத்தப் பட்டுள்ளது. என்று நீதித் துறை உயரதிகாரிகளால் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
கடந்த டிசெம்பர் 23ந் திகதி நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் மட்டகளப்பு மங்களாராம விஹாரையில் வைத்து அங்கு குடிகொண்டிருக்கும் அம்பிடியே சுமண , மற்றும் கல கொட அத்தே ஞானசார ஆகிய காவி தரித்த இரு தீவிர வாத அடிப்படைவாதிகளின் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு ,அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை ஆமோதிக்கும் வகையில் “ இந்த மங்களாராம சுமண தேரர் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தமிழ் சமூகங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்” என்று ஊடகங்களுக்கு பகிரங்கமாக கருத்து தெரிவித்தமையானது நீதி மற்றும் நீதிமன்ற துறைகளில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் நீதித்துறை உயர்மட்டத்தில் பாரிய அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுமண மற்றும் ஞான சார ஆகிய இருவரும் பகிரங்க ஊடகங்களுக்கு முன்னிலையில் நீதிமன்ற தீர்ப்புகளை கிழித்தெறிந்து நீதி மன்றங்களை அவமதித்தவர்கள். தற்போதைக்கும் இவ்விருவரும் நீதிமன்றங்கள் மூலம் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளவர்கள். நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப் பட்டவர்கள் என்பது குற்றமற்று சுதந்திரமாக விடுவிக்கப் பட்டவர்கள் என்ற கருத்து கிடையாது. இவர்கள் தற்போதைக்கும் நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப் பட்டுவரும் வழக்குகளில் சந்தேக நபர்களாவர். இவ்வாறானதொரு நிலையில் தான் நீதியமைச்சர் இவர்களின் காலில் விழுந்து கும்பிட்டு இவர்களின் கடந்த கால செயல்களை நியாயப் படுத்தியுள்ளார்.
நீதியமைச்சு செயலாளரின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு நேர்மாற்றமாக அமைந்துள்ள நீதியமைச்சரின் இச்செயற்பாடானது மிகவும் பாரதூரமானதாகும். அம்பிடியே சுமண தேரர், அரச உத்தியோகத்தரான மட்டகளப்பு கிராம அலுவலகர் ஒருவரின் அரச கருமமொன்றிட்கு எதிராக அவரது கடமைகளை செய்யவிடாது கடும் தொனியில் இடையூறு செய்தவராவார். குறித்த கிராம உத்தியோகத்தருக்கு எதிராக பல தூசன வார்த்தைகளால் ஏசியதுதுடன் “ நீ யொரு புலி , நீயொரு புலியேதான்.” என்று பொதுமக்கள் முன்னிலையில் இனத்துவேஷமாக வைராக்கியதோடு ஏசியவர். இவ்வரின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நீதியமைச்சின் செயலாளர் எழுத்து மூல அறிக்கையொன்ற சட்டமா அதிபருக்கு சமர்பித்துள்ளார். இதனடிப்படையில் மங்களாராம சுமண தேரருக்கு கெதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக கைது செய்யப் பட்ட இவர் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப் பட்டதொரு சந்தேக நபராவார். அதேபோல் கல கொட அத்தே ஞானசாரவும் பல குற்றச் சாட்டுகளுக்கு எதிராக கைது செய்யப் பட்டு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விட்விக்கப் பட்டுள்ள சந்தேக நபராவார். ஆனால் நீதியமைச்சர் இவர்களுடன் கூட்டிணைந்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறி இவர்களின் செயற்பாடுகளை நியாயப் படுத்தியுள்ளமை இந்த நாட்டின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு விடுக்கப்ப பட்ட அச்சுறுத்தலாகும்.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தாம் புத்த சாசன அமைச்சர் என்ற வகையில் அவரின் செயற்பாடுகளுக்கு நியாயம் கூற முற்பட்டாலும் அவரால் நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தி மிகப் பெரியதாகும். இதனை எவ்வகையிலும் மூடிமறைக்க முடியாததாகும். பிரித்தானியாவில் வசிக்கும் சட்டவியலாளர்களின் கூற்றுப் படி , பிரித்தானிய சட்ட விதிகளுக்கமைய , பிரித்தானிய நீதியமைச்சர் ஒருவர், பிணையில் விடுவிக்கப் பட்டுள்ள ஒருவரை நீதியமைச்சர் சந்தித்தாரெனில் மறு தினமே அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப் படவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்று கூறுகின்றார்கள்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த சமூக ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட அரச இயந்திரத்தை முடக்குவதற்காக “ மைத்ரி ஆட்சி “ ( கருணை ஆட்சி) என்ற கொள்கைக்காக இந் நாட்டு மக்கள் அணிதிரண்டு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பரிந்துரைக்கப் பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் ஒழிப்பு , இன ஒற்றுமை , கள்வர்களை சட்டத்தின் முன் கொண்டுவருதல் , எனும் மூன்று பிரதான விடயங்களுக்காகவே நல்லாட்சி ஏற்படுத்தப் பட்டது. ஊழல் ஒழித்தல் , கள்வர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவருதல் ஆகிய பிரதான நடவடிக்கைகளின் அடிப்படை இயங்கு தளம் நீதித் துறை மட்டும் நீதிமன்றங்களாகும். இந்த துறை சார்ந்த அமைச்சுப் பதவியை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பொறுப்பேற்று ஒரு சில தினங்களுக்குள் , பீல் மாஷல் சரத் பொன்சேகா , மற்றும் ஜே வி பியினர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிரான பாரிய குற்றச் சாட்டுகளை சுமத்தி பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரலெழுப்பினார்கள். கடந்தமகிந்த ஆட்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பல கோடி மில்லியன்கள் மோசடி செய்யப் பட்ட அவன்கார்ட் ஊழல்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக பரந்தளவிலான குற்றச் சாட்டுகள் இருந்த நிலையில் அவருடைய கடவுச் சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப் பட்டிருந்த நிலையில் அதை கொடாபயவுக்கு மீட்டித் தருவதில் விஜேதாச ராஜபக்ஷவுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக குற்றம் சுமத்தப் பட்டது அவதானிக்க தக்க விடயமாகும்.
இவற்றின் தொடர் நிகழ்ச்சியாக கடந்த டிசெம்பர் 23ந் திகதி நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் மட்டகளப்பு மங்களாராம விஹாரைக்கு சென்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளரினதும், ஜனாதிபதி மஹிந்த வினதும் நெருங்கிய நண்பர்களான மங்களாராம சுமண மற்றும் கல கொட அத்தே ஞான சார ஆகியோரை சந்தித்த அதே தினம், ஜப்பானில் கடும் போக்கு பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்கால இலங்கை நாட்டு ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தெரிவாக வேண்டும் என்ற வேண்டுதலுக்காக ஒரு புத்தர் சிலையை திறந்து வைத்து “ அதிஷ்டான பூஜை” நடத்தப் பட்டது.
ஆகவே நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ எதோ ஒரு மறைத்த நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுவதாகவே அவதானிகளால் சுட்டிக் காட்டப் படுகின்றது. எது எவ்வாறாயினும் பெரும்பான்மை கட்சிகளின் கூட்டிணைவில் உருவான நல்லாட்சியில் சிறும்பான்மையினரின் பாதுகாப்பு, மற்றும் உரிமைகள் மீண்டும் புஸ்வாணமாக்கப் பட்டுள்ளது வெள்ளிடைமலையாக உள்ள நிலையில் இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் அடுத்துவரக் கூடிய தேர்தலை இலக்கு வைத்து பெரும்பான்மை வாக்குகளை தம்வசமாக்கும் வியூகங்களையும் இந்த இனவாத செயற்பாடுகளை சாதகமாக பயன்படுத்தும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது.
he is one of the racist and trying to setup a game against Muslim.
ReplyDelete