மாளிகாவத்தை மையவாடிக் காணி, மீண்டும் அபகரிப்பு
ARA.Fareel
மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி காணியை ஆக்கிரமித்து சட்ட விரோதக் கட்டடமொன்றினை நிர்மாணித்து வரும் தனியார் நிறுவனம் அவ்விடத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் அதிசக்தி வாய்ந்த மின்சாரக் கட்டமைப்பை மையவாடி காணிக்குள் இடமாற்றுவதற்கு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகளுக்கு மாளிகாவத்தை பள்ளிவாசல் ஜமா அத்தாரும் இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கமும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன.
மையவாடி காணியை ஆக்கிரமித்து சட்டவிரோத கட்டடம் அரசியல் பின்புலத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மின் கட்டமைப்பையும் மையவாடி காணிக்குள் நகர்த்த முயற்சிக்கின்றமையை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென இலங்கை முஸ்லிம் மத உரிமைகள் சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தமது அமைப்பு முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.
மாளிகாவத்தை மையவாடி காணியை நிர்வாகித்து வரும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இது தொடர்பாக மாளிகாவத்தை பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட மின்கட்டமைப்பு இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

இந்தக்கதயும் இறப்பர்போல இளுபடுகிறது,
ReplyDeleteசட்ரீதியாக இதை தட்டிக்கேட்க முடியாத நிலை???