''நாட்டுக்கும், மக்களுக்கும் செய்யும் பெரிய அநியாயம்''
நாட்டுக்குள் தற்போது விற்பனை செய்ய பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் மாத்திரமே எஞ்சியிருப்பதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு செல்லும் திசையை கண்டும் நானும் எமது தரப்பினரும் அமைதியான நிலைப்பாட்டை கடைப்பிடிப்போம் என்றால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் பெரிய அநியாயம்.
அரசாங்கத்தை கொண்டு நடத்த தகுதியற்றவர்கள் சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து நாளுக்கு நாள் நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ள முயற்சித்து வருகின்றனர்.
நாட்டை விற்பது என்பது எண்ணியது போல் இலகுவானதாக இருக்காது. மக்களுக்கு அநீதி ஏற்படும் வகையில், அரசாங்கம் ஒழிந்து செய்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்திற்கு கடைக்கு போகும் சமன் ரத்னபிரியவையும் இதில் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
அரசாங்கம் மஞ்சள் கடவைகளை வெள்ளையாக மாற்றியதையும் பழிவாங்களையும் மாத்திரமே செய்துள்ளது.
மைத்திரியும் ரணிலும் மேற்கொண்டு வரும் இந்த நடகத்தை நிறுத்த வேண்டும்.
நாட்டை விற்கும் அரசாங்கம் கொண்டு வரவுள்ள சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து 10 ஆயிரம் தாதியரை நாடாளுமன்றத்திற்கு எதிரில் கொண்டு வரவுள்ளதாக முருத்தொட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முருத்தொட்டுவே ஆனந்த தேரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மிக தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment