Header Ads



''முஸ்லிம்களும் மனிதர்கள்தான்''

-Iraiadimai-

வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது? என கேட்டார்.

உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர்.

சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், ''பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே!'' என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.

உண்மைதான்! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!

முஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.

இந்த கரும்பலகை உதாரண புரிதல் இன்று தமிழத்திலும் ஊடுருவி விட்டது என எண்ணும் போது இந்த கட்டுரைக்கு அவசியமே ஏற்பட்டது. சரி இனி கட்டுரை உள்ளே பயணிப்போம்.

இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை... இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்?

இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்...

''வீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது.'' (அல்குர்ஆன் 5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா...? சிந்திக்க வேண்டும் சகோஸ்...

இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.

தீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்..? புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...

1 comment:

  1. இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம்.

    வம்புக்கு குறைகாண தேவை இல்லை
    மேலே சொல்லப்ட்டவற்றில் ஏதாவதொரு கேள்வி கேட்டால் போதும் பதில் சொல்லிருவீங்க.😂😅

    1. குரானில் நீங்கள் கேட்டதற்கு பதில் இருக்கிறது நல்லா ஒருதரம் படித்து பாருங்கள்.
    2. ஜாக்கீர் நாயக்ட வீடியோ பாருங்க
    3. விதண்டாவாதம் பண்ணாதே
    4. யாரும் இந்த காபீருக்கு பதில் சொல்லி த்தான் இஸ்லாத்தை நிறுபிக்கவேண்டும் என்றில்லை
    5.உங்க மதம் இத எல்லாம் உண்மை எனடுது நீ எல்லாம் கதைக்க வந்திட்டாய்.
    6. உங்கம்மா******** ********* *******
    7.@/@7£₹£&^×46 99€&^$!+% € ₹₹*%=×

    இவை தான் முஸ்லிம்களிடம் இருந்து கிடைக்கும் பதில்கள்.

    ReplyDelete

Powered by Blogger.