'மஹே ரட, சிங்கள ரட' - புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காங்கற்றிய ரட்ணசிறி
விடுதலைப் புலிகளை இந்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். இராணுவத்தினரால் புலிகளை விரட்ட முடியும் என்று வீர வசனம் பேசிய ஒருவர்.
இலங்கை வரலாற்றில் முக்கிய அரசியல் புள்ளியாக திகழ்ந்தவர். இன்று உலகுக்கு விடை கொடுத்திருக்கிறார். அவர்தான் இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க.
உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் காலமானார்.
இவரது அரசியல் பயணம் இலங்கை வரலாற்றில் சில திருப்பங்களைக் கொண்டது. புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்த மிக முக்கிய அரசியல் வாதிகளில் இவரும் ஒருவர்.
அதுமட்டுமன்றி புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக உலக நாடுகளால் அங்கிகரிக்கப்படுவதற்கு இவர் இந்தோனேசியாவில் ஆற்றிய உரையே காரணமாக இருந்தது.
2001ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரட்ணசிறி விக்ரம நாயக்க, சிங்கள மக்களின் தேவைகளையும் , உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக நின்று செயலாற்றினார்.
குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதே இவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக புலிகளுக்கு எதிராக அதிகம் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
காந்தியின் "வெள்ளையனே வெளியேறு" என்ற குறிக்கோளைப்போல "மஹே ரட சிங்கள ரட" என்ற குறிக்கோளை நாடு முழுவதும் ஒலிக்கச்செய்து, இறுதிவரை அதனையே தன் முழு மூச்சாகவும் பயன்படுத்தினார்.
தமிழிரின் எல்லை மீறும் அரசியல் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் போன்ற தனது கடுமையான கொள்ளையை முன்வைத்திருந்தார்.
துரதிஷ்ட வசமாக பதவியேற்ற ஓராண்டு காலப்பகுிலேயே பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட, சாதாரண கோணங்களில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறு இலங்கையில் பேசப்படும் முக்கிய தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த முக்கிய சிங்கள தலைவராகவும் இவர் விளங்குகின்றார். தமிழர்கள் மீதான அரசியல் பங்கெடுப்பு நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என தமது மேடைப் பேச்சுக்களில் வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் 2005ஆம் ஆண்டு மீண்டும் இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். மஹிந்த அரசியலின் மிக முக்கிய பங்குதாரராகவும் விளங்கிய ரட்ணசிறி விக்ரம நாயக்க இலங்கை வரலாற்றில் மறைமுகமாக பிரதமர் பதவி வகித்தவர் எனவும் கூறப்படுகிறார்.
காரணம் இவர் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் இவரா இலங்கை நாட்டின் பிரதமர் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனாலும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை ஏகமனதாக நிறைவேற்றியிருந்தார்.
Post a Comment