அரசாங்கத்தை அவர்கள் பறித்து கொள்ள இடமளிக்க மாட்டோம் - கபீர் ஹசீம்
அரசாங்கத்தை கவிழ்ப்பது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக அரசாங்கத்திற்கு இப்படியான அச்சுறுத்தல் விடுக்கப்படுவதன் மூலம் யார் சூழ்ச்சிக்காரர்கள் என்பது தெரியவரும் என அமைச்சர் கபீர் ஹசீம் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இந்த நாட்டில் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்து, சர்வாதிகாரத்தை முன்னெடுத்து வந்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்த ஜே.ஆர். ஜயவர்தனவை கடுமையாக விமர்சித்து வந்த மகிந்த ராஜபக்ச, அதே அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தங்களை செய்து தான் மற்றும் தனது குடும்பத்தினரின் அதிகாரங்களை பலப்படுத்திக்கொண்டார்.
மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரத்தை ஒழித்து நாங்கள் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற காலத்தில் இருந்து அதனை கவிழ்க்க இவர்கள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந்த கோஷ்டியினர் தலைகீழாக நின்றாலும் மக்கள் ஆணையை கொண்டு ஆட்சியை நடத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை அவர்கள் பறித்து கொள்ள இடமளிக்க மாட்டோம்.
வெளிநாட்டு ஊடகங்களிடம் மகிந்த ராஜபக்ச 2017ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கூறுவாராயின் யார் சர்வதேச சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.
Yahapalanaya is a sinking ship now. MR needs not to do anything.
ReplyDelete