டின் மீன் + செத்தல் மிளகாய் தொடர்பில் எச்சரிக்கை
டின் மீன் கொள்வனவு செய்யும் போது, அதன் லேபல் மற்றும் காலாவதித் திகதியை சோதித்துப் பார்த்து கொள்வனவு செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை, மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலவதியான மீன் டின்களில் புதிய லேபல் ஒட்டி விநியோகிக்கப்பட்ட வியாபாரம் தொடர்பில் தகவல்களை வெளிக்கொண்டுவர நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என, அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பழுதடைந்த டின் மீனை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத்தவிர, இவ்வாறான டின் மீன்களை சந்தைப்படுத்தும் விற்பனை பிரதிநிதிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு வியாபாரிகளிடம் அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.
2
2
இறக்குமதியாகும் செத்தல் மிளகாயில் அதிக விஷம் கொண்ட இரசாயனப் பொருளான 'மொனகுரடபஸ்இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இது பற்றி அனுராதபுர மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணப் பிரதி விவசாயப்பணிப்பாளர் பத்தி ரன தற்போது இந்தியாவில் இருந்து பெரும்தொகை செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்தப்பின்னணியில் உள்ள10ரில் மிளகாய் உற்பத்தியை விஸ்தரிப்பது மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.அனுராதபுரம் மாவட்ட த்தில் நிலையான உற்பத்தி வேலைத்திட்டம் திட்டமிடப்படுவதாகத் தெரிவித்த அவர், மிளகாய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அதிக முன்னுரிமை வழங்கப்படுவது சாலச் சிறந்ததென்றும் அரச அதிபர் டீ.ஜீ.பீ.குமரசிறி தெரிவித்தார்.
Post a Comment