Header Ads



நிகாபுக்கு இனி தடை இல்லை - பரீட்சை ஆணையாளர்

தங்கள் ஆடைக்கலாச்சாரத்தை பேணி நடக்கின்ற இஸ்லாமிய பெண்கள் நிகாப் அணிந்து   பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிகாப் அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களை, பரீட்சை நிலையங்களில் பெண் உத்தியோகத்தர்களாலேயே ஆள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும் தான் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு பரீட்சை நிலையத்திலும் இதற்கு எதிராக நடடிக்கை எடுக்கப்பட்டால் உடனடியாக தனக்கு அறியத்தருமாறும் அவர் வேண்டிக்கொண்டுள்ளார். (மேலதிக விபரங்களுக்கு/ முறைப்பாடுகளை தெரிவிக்க 0723007300  என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்)

கடந்த செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமான இத் தேர்வு, எதிர்வரும் 17ம் வரை நடைபெறுகின்றது. ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக பரீட்சைகள் ஆணையரால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை காரணமாகவே இந்த சர்ச்சை எழுந்திருந்தது தொடர்ந்தும் பரீட்சார்த்தியொருவரின் ஆள் அடையாளம், தேர்வு எழுத முன்னர் மேற்பார்வையாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஏற்கனவே நடைமுறையிலிருந்த சுற்றறிக்கையாகும்.

இம் முறைவெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் ஆள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தவாறே தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான அடையாளத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிதல், பாடசாலை அல்லாத பரீட்சார்த்திகளில் ஆண்கள் தாடியுடன் தோற்றுதல் போன்றவை தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டது.

கண்டி, அனுராதபுரம், குருநாகல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவானதை அடுத்தே அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும் கல்வியமைச்சருடனும் நேரடியாக தொலைபேசி மூலம் அமைச்சர் அமைச்சில் இன்று உரையாடினார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளை ஏற்று நேற்று  பிரதமர் கல்வியமைச்சரிடம் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையை நீக்குவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.