Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவேன் - அமைச்சர் ஹலீம்


முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சரான ஹலீமுக்கும், யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்கிழமை (20) ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள், தற்போதைய யாழ்ப்பாண முஸ்லிம்களின் நிலவரம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இறையில்லங்கள் மற்றும் மத்ரஸாக்களின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை மையப்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹலீம், கடந்த காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தியதுடன், எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்க தயாரெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்து தெரிவித்த டாக்டர் ரம்ஸி,

யாழ்ப்பாண முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆர்வம் கெண்டுள்ள அமைச்சர் ஹலீமுடனான சந்திப்பு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. தம்மால் முடிந்த உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் நல்குவதற்கு அமைச்சர் ஹலீம் இணக்கம் வெளியிட்டார். எதிர்காலத்திலும் இவ்வாறான சந்திப்புகளை மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால்முறை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம், யாழ்ப்பாண முஸ்லிம்களின் சார்பில் டாக்டர் ரம்ஸி, டாக்டர் ஹிஜாஸ், கணக்காளர் ஜான்ஸன், அஸீம் மாஸ்டர், சகோதரர் தையூப் மற்றும் நௌசிடீன் ஆகியாரும் பங்கேற்றுள்ளனர்.


No comments

Powered by Blogger.