முஸ்லிம் எம்.பி.க்களின் கையெழுத்துக்கு, பலன் கிட்டுமா..?
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் சந்திப்பின்போதே இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் ஒருங்கிணைப்பில் எழுதப்பட்ட இக் கடிதத்திலேயே சகல முஸ்லிம் எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத பிரசாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டத்தை நிலைநாட்டுமாறும் இக் கடிதத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment