'வெளிநாட்டவர்கள் இலங்கை முஸ்லிம்களை, மணம் முடிப்பதற்கான தடை நீக்கப்பட வேண்டும்'
வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து இந்நாட்டு முஸ்லிம்களை முஸ்லிம் விவாக சட்டத்தின் கீழ் விவாகம் செய்து கொள்ள முடியாது என்ற தடை நீக்கப்பட வேண்டுமென ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழு தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்து இந்நாட்டு முஸ்லிம்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை எவ்வித தடையும் இருக்கவில்லை என்றாலும் பதிவாளர் நாயகம் திணைக்களம் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள 2013.10.02 ஆம் திகதியிட்ட 10/2013 சுற்று நிருபத்தின் மூலம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்கை வந்து இலங்கை முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற சிபாரிசினையும் தனது அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
ARA.Fareel
அந்தச்சட்டம் யாரால் கொண்டு வந்தது? ஏன் முஸ்லிம் mpகள் அல்லது உலமாசபை மௌனமார்கள்? இது ஏன் இப்போது வெளியாகியது?
ReplyDelete