நாட்டை அச்சுறுத்தும் வைரஸ்
நாட்டில் தற்போது டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா ஏ என்ற வைரஸ் நோய் பரவுவதன் காரணமாக மிகவும் அவதானமதாக செயற்படுமாறு மருத்துவ ஆராய்ச்சியின் வைரஸ் நோய் நிபுணர் ஜுட் ஜயமக தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், சளி, உடம்பு வலி, தொண்டை வலி, தலைவலி, மூட்டு வலி, சுவாச பிரச்சனைகளை போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் என்றால் இரத்த பரிசோதனையின் பின்னர் மாத்திரமே நோயை அடையாளம் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் இரண்டு நாட்களுக்கு அதிகமான காய்ச்சல் காணப்பட்டால், வைத்திய ஆலோசனைக்கமைய, இரத்த பரிசோதனை மேற்கொண்டு அது டெங்குவா என அறிந்துக் கொள்ளுமாறும் அவ்வாறு இல்லை என்றால் அது இன்ப்ளூயன்ஸா ஏ வைரஸாக இருக்கலாம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த நாட்களில் பரவும் வைரஸ் தொடர்பில் அவ்வளவு அச்சமடைய தேவையில்லை. எனினும் வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொண்டு ஓய்வு, அதிகம் நீர் பருகுதல், வேலைப்பளு இன்றி இருத்தல் போன்றவற்றை பின்பற்றினால் நோயினை விரைவில் குனப்படுத்த முடியும் என வைத்தியர் கூறியுள்ளார்.
நபர் ஒருவரின் உடம்பில் உள்ள நோய்த்தடுப்புகள் மூலம் வைரஸ் தொற்று குனமடையும், எனினும் நோய்த்தடுப்புகள் குறைவான கரப்பினி தாய்மர்கள், சிறிய குழந்தைகள், நாட்பட்ட நோய்களை உடைவர் மற்றும் 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு இந்த வைரஸ் உடம்பினுள் சென்றதன் பின்னர் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட கூடும் என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment