இன்றுடன கருணைக்காலம் நிறைவடைவு
உரிமையாளரின் பெயருக்கு உரிமைமாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்தும் பயன்படுத்தி வரும் வாகனங்களை எந்தவித அபராதமும் இன்றி பதிவு மாற்றம் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகை காலம் இன்றுடன் நிறைவுக்கு வருவதாகவும் இச்சலுகைக்காலம் மேற்கொண்டு நீடிக்கப்படமாட்டாது என போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் வரை இவ்வாறு தற்போதைய உரிமையாளரின் பெயருக்கு வாகனங்களை பதிவு செய்துகொள்ளமுடியும் எனவும் இன்றைய தினம் வருகை தரும் அனைவரது பத்திரங்களையும் ஏற்றுக்கொள்ளவதற்கு முயற்சிப்பதாகவும் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதியிலிருந்து நவம்பர் முப்பதாம் திகதிவரை இந்த சலுகைகாலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அக்காலம் டிசம்பர் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தது.
முதலாவது உரிமையாளரிடம் வாகனத்தை ஒருவர் கொள்வனவு செய்ததன் பின்னர் அவ்வாகனத்தை நடைமுறை உரிமையாளரின் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் அதன்பிறகு பதிவு செய்வதாயின் அபராதங்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகைக்காலத்தினுள் இலட்சக்கணக்கானோர் இவ்வாறு அறவீடுகள் இன்றி பதிவுகளை மேற்கொண்டிருந்த நிலையில் அதுதொடர்பான எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்கவில்லை.
இன்றுடன் சலுகைக்காலம் நிறைவுக்கு வந்ததன் பின்னரே பதிவுகளை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும் எனவும் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Awesome plan by the government and in the right track
ReplyDelete