வதந்திகள் இல்லாத வாழ்க்கை, சலித்து போய்விடும் என்கிறார் புடின்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 2014ம் ஆண்டே கொல்லப்பட்டதாகவும், தற்போது, அவரை போல் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை தலைமையில் ரஷ்யா வழிநடத்தி செல்லப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சதி கோட்பாடுகள் படி புடின் கொல்லப்பட்டதாக கோட்பாட்டாளர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். கோட்பாட்டாளர்கள் கூறியதாவது, புட்டின் தோற்றத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
புட்டினின் ஜேர்மன் பேசும் திறனில் ஏற்பட்டுள்ள குறைபாடு, 2014ல் அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றது ஆகியவை ரஷ்யா ஜனாதிபதி உண்மையான புடின் இல்லை என்பதற்கான சான்றுகள்.
தற்போது, மத்திய புலனாய்வு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புடின் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
2014ல் புடின் விஷம் வைத்து கொல்லப்பட்டார். பின்னர், அவரின் இரட்டை இரகசியமாக மாற்றப்பட்டார் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் புடின் தனது இறப்பு குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, வாழ்க்கை வதந்திகள் இல்லாமல் சலித்து போய்விடும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment