Header Ads



இதுதான் முஸ்லிம்களின் நிலை..!

💥 மனிதாபிமானம் என்பதை மறந்து இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்குறான்

💥 ஆஹரத்தை புறக்கணித்து துன்யா மேல் மோகம் கொண்டு விட்டான்.

🔶 அல்லாஹ் ஒரு நாளைக்கு 5 தடவை அழைக்கிறான். அது அவன் காதில் விழாது. யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பு ஒலி மட்டும் எப்படி தூக்கத்திலும் அவன் காதுக்கு கேட்டு விடும்.

🔶  அல்லாஹ்வின் திருமறையை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் திறக்க நேரமில்லை. ஆனால் whatsapp, viber, Facebook, Twitter என அனைத்தையும் 24 மணிநேரமும்  திறந்து வைத்திருக்குறான்.

🔶 எவ்வளவோ அல்லாஹ்வுக்கு மாறு செய்திருப்பான். ஒரு தடவை கூட தவ்பா செய்ய மனம் நினைப்பது குறைவு. ஆனால் தவறுதலாக தட்டு பட்ட ஒருவரிடம் 10 தடவை மன்னிப்பு கேட்பான்.

🔶 அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அதிகாலை எழ மாட்டான். ஆனால் வேலை செய்யும் முதலாளியின் கட்டளைக்கு பயந்து அலாரம் வைத்து எழுவான்.

🔶 அற்ப தொழில் நஷ்டத்துக்காக கைசேதப் படுவான். மறுமையில் கைசேதப் படப் போவதை எண்ண மாட்டான்.

🔶 கோமான் நபிகளாரின் பொன்மொழிகள் 10வது முழுமையாக அறிந்து வைத்திருக்க மாட்டான். ஆனால் சினிமா கூத்தாடிகளின் ஒவ்வொரு Punch Dialoguesஐயும் மந்திரம்  போல் சொல்வான்.

🔶 திருமறை வசனம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் அது எந்த சூறாவில் உள்ளது என சொல்ல  முடியாதவனாய் இருப்பான் ஆனால் ஒரு பாடல்வரி பாடிக்காட்டப்பட்டால் எந்த திரைப்படம் என்ன பாடல் என அச்சொட்டாய் சொல்வான்.

🔶 அவனது காதுகள் குர்ஆன் ஓதலுக்கோ பயான் ஓடியோவுக்கோ செவி சாய்க்காது. ஹராமான இசைக்கு செவி சாய்ப்பான்.

🔶 இபாதத்தில் இன்பம் காண மாட்டான். பாவத்திற்கு ரசிகனாய் இருப்பான்.

🔶 அல்லாஹ்வின் பாதையில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய யோசிப்பான். வீண் ஆடம்பரங்களுக்கு லெட்ச கணக்கில் கணக்கின்றி செலவழிப்பான்.

🔶 சுவர்க்கத்துக்கு நன்மாராயம் செய்யப்ட்ட 10ஸஹாபாக்களை அறிந்திருக்க மாட்டான். கிரிக்கட் வீரர்களில் ஒருவரின் பெயரைக் கூட தெரியாமல் இருக்க மாட்டான்.

🔶 சந்தர்ப்ப துஆக்கள் ஓதியிருக்க மாட்டான். ஆனால் பாடல் வரிகளை மனனமாக்க மறந்திருக்க மாட்டான்.

🔶 காதுகளைக் கிழித்து ஒலிக்கும் பாங்குக்கு மரியாதை செலுத்தி மௌனிக்க மாட்டான். ஆனால் நகைச்சுவை காட்சியை ரசிக்க அனைவரின் வாயையும் மூட வைப்பான்.

🔶 போலி துன்யாக்காய் கோடி கணக்கில் சேர்த்து வைப்பான். மஹ்ஷர் நாளில் கை கொடுக்க எதுவும் சேகரிக்க மாட்டான்.

🔶 சிறிய கவலையையும் பெரிதாய்  எண்ணுவான். முள் குத்தும் வேதனைக்கும் பாவம் மன்னிக்கப் படுவதை அறிந்துருக்க மாட்டான்.

🔶 தொழுதுவிட்டு இறைவறனுக்காய் திக்ர் செய்ய 10 நிமிடம் கூட ஒதுக்க மாட்டான். ஆனால் Phone ல் game விளையாட 10 மணிநேரம் என்றாலும் தயங்க மாட்டான் .

இதை எழுதும் நான் உட்பட அனைவரும் பாவங்கள் செய்யக்கூடிய  சாதாரண மனிதர்ளே!!!

இன்ஷா அல்லாஹ் தவ்பா செய்வோம். ஆஹரத்துக்காய் சேர்ப்போம்.

வட்ஸப்பில் வந்தது..!

6 comments:

  1. மேல் சொன்னவை எல்லாம் மிகவும் அரிது நடைமுறையில்.மிச்சம் குறையை காணவேண்டாம்.

    ReplyDelete
  2. யா அல்லாஹ் எங்களை மண்ணித்து அருள்புரிவாயாக. இப்படியான திடுக்கிடும் அறிவுபூர்வமாய் எழுதிய இந்த எழுத்தாளனுக்கும் அருள்புரிவாயாக

    ReplyDelete
  3. Mullahs want all Muslims to listen to them and give up
    everything else to please them because they know
    nothing else to survive on this earth but the world is
    looking for more space in the moon and mars for the
    ever increasing human population on this earth .
    Religion is not the solution for anyone to live on this
    earth . To earn for the next world , you must first
    live on this world and that is why even the prophet
    said " go even to China in search of knowledge." What
    knowledge did he mean ? Religious knowledge ?
    Islamic knowledge in China ? Don't blame people for
    their actions but you can go on preaching ! And also
    kindly remember one thing . Ancient people passed
    their knowledge and experiences through the medium
    of songs without which we won't be where we are
    today . Those who don't know history know not the
    future.

    ReplyDelete
    Replies
    1. Vinai vidhaithavan vinai aruppaan, thinai vidhaithavan thinai aruppaan. Every action has reaction.

      Delete
  4. Bro muzammil please do check if it's saheeh.
    It's actually a fabricated hadeeth.
    Please verify before quoting a hadeeth.
    We cannot tell anything that it has been said prophet when he actually didn't say it. Even if it's a good thing.

    ReplyDelete

Powered by Blogger.