Header Ads



கருணாவுக்கு பிணை வழங்க, நீதிமன்றம் மறுப்பு - திஸ்ஸ பிணையில் விடுதலை

அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை பிளையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

டிசெம்பர் 7ஆம் நாள் வரை கருணா விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டிய கடந்தவாரம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் கருணாவின் உயிருக்கு ஆபத்து இருக்கதாக கூறி, அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அவரது சட்டவாளரால் இன்று கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தப் பிணை மனுவை நிராகரித்த நீதிவான், டிசெம்பர் 7ஆம் நாள் இதனை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.

2

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு  பிணை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை இன்று (05) கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.