மலேசியாவில் ஜனாதிபதி மைத்திரி தங்கும், விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு
மைத்திரிபால சிறிசேன இன்று -15- மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அங்கு தங்கவுள்ள விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கோலாலம்பூர் செல்லவுள்ளார்.
அவர் கோலாலம்பூரில் உள்ள இன்ரகொன்ரினென்டல் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிக்கு முன்பாக, போராட்டங்களை நடத்துவதற்கு மலேசியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசிய சென்றிருந்த போது, தமிழ் அமைப்புகள் போராட்டங்களை நடத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கோலாலம்பூர் வரும் சிறிலங்கா அதிபர், வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத் துறைகளை இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஊக்குவிப்பதற்காக, வர்ததக அமைப்பு ஒன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று மாலை இன்ரகொன்ரினென்டல் விடுதியில், சிறிலங்கா கலாசார, உணவுத் திருவிழாவையும் அவர் தொடங்கி வைப்பார்.
மலேசியப் பிரதமர், நிஜாப் ரசாக்கை சிறிலங்கா அதிபர், நாளை சந்தித்துப் பேசுவார். இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் 5 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும்.
சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்ளிட்ட குழுவொன்றும் மலேசியா சென்றுள்ளது.
எங்கே கலகொட அத்தே.
ReplyDeleteஜனாதிபதி ஒரு முஸ்லிமுடன் ஒப்பந்தம் செய்யப்போகிறார்.