முஸ்லிம்கள் வீதிக்கு இறங்காதவரை, விமோசனம் கிடையாது - ருஸ்தி ஹபீப்
நல்லாட்சி என கூறி, முஸ்லிம்களின் வாக்குப் பலத்துடன் பதவிக்கு வந்த இந்த அரசு, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் கவனத்தை செலுத்தி வருவதாக சமூக ஆர்வலரும், பிரபல சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
புதிய அரசியலமைப்புக்கான பணிகள் தீவிரம் பெற்றுள்ளன. ஆனால் முஸ்லிம் சமூகமோ தமக்கும், அரசியலமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற மனநிலையில் உள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் பணத்திற்கு விலை போய், இந்த சமூகத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடகுவைத்து விடுவார்களோ என்று சிந்திக்குமளவு நிலைமைகள் பாரதூர கட்டத்தை எட்டியுள்ளன. பணத்தைக் கொடுத்து ஆசை காட்டி, முஸ்லிம் சமூகத்தை அடக்கிவிடலாம் என்ற நினைப்பில் காரியங்கள் அரங்கேறுகின்றன.
முஸ்லிம் சமூகமானது இதுதொடர்பில் எந்தவித ஆர்வமற்று காணப்படுவது கவலைக்கும், விசனத்திற்கும் உரியது. தேர்தல் சீர்திருத்தமானது மிகவும் அபாயகரமானது. எல்லை நிர்ணயம் முஸ்லிம் கிராமங்களை பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கு மத்தியில் இரண்டாம் பிரஜைகளாக்கிவிடுமோ என அஞ்சுகிறோம்.
வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கு எதையாவது வழங்கத் துடிக்கும் அரசாங்கம், அங்குவாழும் முஸ்லிம்கள் பற்றி ஆர்வம் செலுத்தவில்லை.
இவற்றினால் புதிய அரசியலமைப்பானது முஸ்லிம் சமூகத்திற்கு பாதங்களை தரக்கூடியது என உணரமுடிகிறது. எனினும் சமூகம் இதுதொடர்பில் விழிப்பற்று நிற்கிறது. முஸ்லிம் சார்பு ஊடகங்களும் உரிமுறையில் சமூகத்தை வழிப்புணர்வூட்ட தவறியுள்ளன.
இதனால் ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களுடன் அரசாங்கம் கூடிக்குலாவி வருகிறது. சிறையில் இருக்க வேண்டியவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் வீட்டிங்கு அழைத்து கலந்துரையாடுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகமும் உறக்கநிலையில் உள்ளது. முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ளாதவரை அதனது அரசியல் எதிர்காலம் என்பது இருள் படிந்ததாக அமைந்துவிடும்.
தமக்கு ஏற்படவுள்ள அபாயங்களை முஸ்லிம்கள் அடையாளம் காண வேண்டும். இந்த பாதிப்புகளிலிருந்து மீள, வீதிக்கு இறங்க வேண்டும். இதை முஸ்லிம் சமூகம் உணராதவரை, நாம் எமது அடுத்த பரம்பரையை உரிமையற்ற, அடிமையான ஒரு சமூகமாக மாற்ற துணைநிற்போம் என்ற பயங்கரத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் ருஸ்தி ஹபீப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கவலைப்பட தமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்.
முஸ்லிம்களின் அரசியல்
ReplyDeleteதிசை மாற்ற படுகிறது புதிய அரசியலமைப்புக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் இவ்
காலகட்டத்தில் எமது சமூக அரசியல்
தலைவர்கள்,இஸ்லாமிய இயக்ககம்,முஸ்லிம் போது அமைப்புகள் மவுனமாக இருந்துவிட்டு எல்லாம் நிறைவு
அடைந்ததும் பின்னர் அறிக்கை மட்டும் விடுவார்கள்.
இறுதியானதும், உறுதியானதுமான முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இப்படியான உணர்வுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஆரோக்கியமான விடயமாக தென்படவில்லை. இவை அரசியல் காழ்புணர்ச்சியினால் வெளிவரும் அறிக்கைகளோ புரியவில்லை. இருந்தாலும் முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமானது என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ReplyDeleteஉங்கள் ஆக்கத்திற்கு நன்றி,இது போன்ற ஆக்கங்கள் எத்தனை முறை வந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும் ,ஆனால் யாரும் பேசமாட்டார்கள்,சிறுபான்மை என்ற மூலைச் சலவை ஒன்று உள்ளது,எங்காவது அசம்பாவிதம் நடந்தால்,எல்லா ஒன்று சேர்ந்து அனுதாபமும் அறிக்கையும் விடத்தான் தெரியும்,இது நடப்பதற்கு முன் யோசனையோடு செய்தாள்,இதே போல் எத்தனை செயல்களைத் தடுத்துயிருக்கலாம் ,தடுக்கலாம் ,எல்லாம் நம் உம்மத்தின் கையில் தான் உள்ளது,யோசித்து பின் சமூதாயெத்தை காண்போம்.அல்லாஹ் துணை செய்வானாக
ReplyDelete