Header Ads



இரத்தக்களரி ஏற்படும் - அநுரகுமார எச்சரிக்கை

தொகுதி வாரியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால், இரத்த களரியான நிலைமை ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

தொகுதிவாரியாக நடத்தப்படும் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியிடாது என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பழைய முறையில் நடத்தப்பட வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எப்படியான தேர்தல் முறையாக இருந்தாலும் மக்கள் விடுதலை முன்னணி பொருட்படுத்தாது எனவும் தேர்தலில் போட்டியிடும் எனவும் அந்த முன்னணியின் அன்றைய தலைவர்கள் கூறியிருந்தனர்.

எனினும் முன்னணியின் தற்போதைய தலைவர்கள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரி முதலாளித்துவ தலைவர்களின் பின்னால் செல்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.