'எங்கள் ராணுவத்தினரின் கைகளில் ரத்தம் படிய, அமெரிக்காதான் காரணம்' - ரஷ்யா
சிரியாவின் அலெப்போ நகரத்தில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவின் அலெப்போ நகரத்தில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதில் சிக்கி பலர் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது, தற்போது கூட ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
அங்குள்ள மிலிட்டரி மருத்துவமனை கிளர்ச்சியாளர்களால் முழுவதுமாக தீக்கிரைக்கானது.
இதற்கெல்லாம் காரணம் அமெரிக்க தான் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் Igor Konashenkov கூறுகையில், எப்படி எல்லா விடயமும் கிளர்ச்சியாளர்களுக்கு சென்றடைகிறது?
இந்த மருத்துவமனை தகர்க்கப்பட்டதற்கு அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு உளவு சொன்னது தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா தான் பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து சண்டையை முடிவுக்கு வரவிடாமல் தடுக்கிறது என கூறிய அவர், எங்கள் ராணுவத்தினரின் கைகளில் ரத்தம் படிய காரணம் அவர்கள் தான் என கூறியுள்ளார்.
இதை முற்றிலுமாக மறுத்துள்ள அமெரிக்கா, சிரியாவை தகர்க்க நினைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு நாங்கள் என்றும் துணைபோக மாட்டோம் என கூறியுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சிரியாவின் அலெப்போ நகரத்தில் 300க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புடினுக்கு, ரஷ்ய ராணுவத்தினரின் இரத்தம் கவலை அளிக்கிறது.
ReplyDeleteசிரியா மக்களின் மேலல்ல.
பிணம் தின்னும் சாத்தான்கள்.
What about Your PUTIN destroyed the hospitals in other areas? Why not talk about it. How many you killed to protect killers by your areal bombing ? Do not try to wash your sin..
ReplyDeleteGOD will reply you in suitable manner for your cruel act against Syrians and in supporting the mass killer ASSAD.