'மூளையை சோதனையிட்டு அதன்பின், பாராளுமன்றம் சென்றது நான் மட்டுமே'
“எனது மூளையை சோதனையிட்டார்கள் இன்னும் சிலரின் மூளைகள் சோதிக்கப்பட வேண்டியுள்ளது” என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சிலரின் மூளையை உடனடியாக சோதனையிட வேண்டும்.
உரிய முறையில் மூளையை சோதனையிட்டு அதன் பின்னர் நாடாளுமன்றம் சென்ற ஒரே நபர் நான் மட்டுமேயாகும்.
பெயர் அடிப்படையில் கூற விரும்பாத போதிலும் நாடாளமன்றில் இவ்வாறு மூளை கோளாறு உண்டா என சோதிக்கப்பட வேண்டியவர்கள் இருக்கின்றார்கள்.
சிலரது மூளையை மட்டும் சோதனையிடுவது போதுமானதல்ல. சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் சொத்துக்கள் போன்றவற்றையும் சோதனையிடப்படுகின்றது.
பகிரங்கமாகவே அரசாங்கத்தின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வோர் இருக்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதி அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment