Header Ads



சர்வதேச விருதை பெற்றார் ஜனாதிபதி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் ஜனாதிபதிக்கு சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதிக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய்களுக்காக விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பின் தலைவர் பேராசிரியர் Adeera Levin என்பவரினால், ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கையில் சிறுநீரக நோயை தடுப்பதற்கு உதவிய வைத்தியர்கள் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.

    முன்னால் ஜனாதிபதிக்கு பஹ்ரைனில் கலீபா பட்டம் கிடைத்தபின் நிரைய இலங்கையில் நிரைய அட்டூழியம் செய்தார்.

    ReplyDelete

Powered by Blogger.