மன்னிப்பு கேட்டார் ரணில்
யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் பிழையானது, அதற்காக மன்னிப்பு கோருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இன்றைய தினம் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
1981ம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக வருந்துகின்றேன். கூட்டு எதிர்க்கட்சியினர் தமது காலத்தில் செய்த பிழைகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. இது பிழையான செயல் என்பது எமக்குத் தெரியும், அதற்காக மன்னிப்பு கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
இதன் போது பிரதமரை கேலி செய்த கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து பிரதமர் இவ்வாறு கூறினார். “உங்களது ஆட்சிக் காலத்தில் நீங்கள் இழைத்த தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டும்”
இதேவேளை, வடக்கில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது குறித்து வடக்குப் பிரதிநிதிகளுடன் பேசத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேயாரின் நரித்தனம், ரணிலின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது.
ReplyDeleteகொஞ்ச காலம் போய், முஸ்லிம்களின்மேல் பொது பல சேனாவை ஏவி விட்டதற்கு மன்னிப்பு கேட்டாலும் ஆச்சரியமில்லை.
சிலருக்கு, மன்னிப்புக் கேட்பதும் ஒரு பொழுது போக்கு. பழக்க தோஷம்.