அஸாத் வெற்றி பெறவில்லை, ஈரானை கட்டுப்படுத்திய ரஷ்யா
ஹலப் வீழ்ச்சியில்ஏகபோக வெற்றி உரிமையை தனதாக்கிக் கொண்டது ரஷ்யா
ஹலப் நகர வீழ்ச்சி அஸாத்தின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை அவனால் தனித்து சாதிக்க முடியவில்லை.
முதலில் துணைக்கு வந்த ஈரான் அஸாத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. அதற்காக 2014 முதல் அது 18 ஆயிரம் வெளிநாட்டு கூலிப்படையினரை தயார் செய்து அனுப்பி இருக்கிறது. அதில் 7 ஆயிரம் பேர் இந்த கிழக்கு ஹலப் பகுதியைக் கைப்பற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டனர். மூன்று சதுர மைல்களுக்குள் முற்றுகையிடப்பட்ட ஓர் இலட்சம் மக்களை கொன்று குவிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று துருக்கியின் தலையீட்டால் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை அவர்கள் குழப்பினர். தாக்குதல்களை தொடர்ந்தனர். துருக்கியின் காய் நகர்த்தல்கள் ரஷ்யாவுக்கு இங்கு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களையும் வெளியேற்றுவதில் இராஜதந்திர நலன்களை சுட்டிக் காட்டியது.
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்ய தரப்பு அதைக் குழப்ப முயன்ற ஈரானிய தரப்பை கடுமையாகச் சாடியது.எனவே ரஷ்யாவுக்கு அவர்கள் கட்டுப்பட நேர்ந்தது.இதன் மூலம் இந்த வெற்றியின் உரிமையை மட்டுமன்றி சிரியா விவகாரத்தின் அசத் சார்ந்த தீர்மானங்களுக்கு தானே தலைவன் என ரஷ்யா நிரூபித்துள்ளது.
அபூஷேக் முஹம்மத்
Post a Comment