Header Ads



யா அல்லாஹ், உன்னிடம் முறையிடுகிறோம்..!


அகிலங்களின் ரட்சகனே
அர் ரஹ்மானே, 
அர் ரஹீமே, 

அலப்போவில் அஸாதின்
அட்டகாசம்
ரோஹிங்கயாவில் விராத்தின்
வைராக்கியம்
அது பற்றி முறையிடுகிறேன்
யா ரப்பல் ஆலமீனே

முறையிடத் தகுதியானவன் நீயே
யா அஸ்ஸமீஉ
உன்னை விட செவியுறும் 
வல்லமை வேறு யாருக்குமில்லை

முதலாளித்துவமும்
சோஷலிஸமும்
பெளத்தமும் 
யூதமும் எம் உம்மத்தை
கதறக் கதற
குதறுகின்றனர் ரஹ்மானே!

அனைத்தையும் அறிந்தவனே
அனைத்தையும் பார்ப்பவனே
உன்னிடமே முறையிடுகிறேன்
உன்னைத் தவிர முறையிட
யாருமே இல்லை 
யா ரஹ்மானே

நீ 
விட்டுப் பிடிப்பவன்
பிடிப்பதில் கடுமையானவன்
தண்டிப்பதில் நீதமானவன்
சோதிப்பதில் வல்லவன்

யா அர்ரஹீமே
சில பாவங்ளை 
நீ
உனதுடனான போராட்டமாய்
எச்சரித்தாய் இருந்தும் 
நாம் செய்துவிட்டோம்

மன்னிப்பதில் தனித்தவனே
தண்டிப்பதில் நீதமானவனே
காப்பதில் உயர்ந்தவனே
எம்மை மன்னித்தருள்
முஸ்லிம் உம்மத்தைக் காத்தருள்

உம்மத்தின் எதிரிகள்
உன் எதிரிகள்
பத்தினிப் பெண்களை
பச்சிளம் சிறார்களை
படுக்கையறைகளை
பள்ளி வாயில்களை
துவம்சம் செய்வதை 
நீ அறியாதவனல்ல.

பாவப்பட்ட மக்களாய் 
ரோஹிங்கயா முஸ்லிம்களும்
சிரியா சுன்னீக்களும்
சரமாரியாய் சரிக்கப்படுகிறார்கள்
சரித்திரம் காணா
சல்லடையாகின்றனர்.

யா ரஹ்மானே
முறையிடத் தகுதியானவன்
நீயே
உன்னிடமே முறையிடுகிறேன்

அநியாயக் காரனின் 
குரல்வளையை நசுக்குவாயாக
விராத்தையும் அஸாத்தையும்
புட்டினையும் அழிப்பாயாக!

பிர்அவ்னை மூழ்கடித்தவனே
காரூனை புதைத்தவனே
ஆப்ரஹாவையும்
யானைப் படையையும் அழித்தவனே
அபூ லஹபை சபித்தவனே
அபூ ஜஹ்லை ஒழித்தவனே
நீ அனைத்தையும் மிகைத்தவன்!!

உன்னிடம் முறையிடத் தவறிவட்டோம்
உன்னிடம் உதவி தேட மறந்திட்டோம்
தவக்குலை கைவிட்டு
ஆயுதத்தை கையிலெடுத்தோம்
இஸ்லாத்தை விலக்கிவிட்டு
ஜனனாயகத்தை செயலிலெடுத்தோம்

பாவங்களை மன்னிப்பவனே
பாவிகள் எம்மை மன்னித்தருள்
எம் ஈமானை ஏற்றருள்
எம் பலகீனத்தை பொறுத்தருள்

எதிரிகளைக் கொண்டு
எம்மைத் தண்டித்து விடாதே

உன்னிடம் முறையிடுவதை
உன்னிடம் பிரார்த்திப்பதை
உன்னிடமிருந்திறங்கும் உதவியை
நம்பிக்கையிழந்து
ஆயுதத்தை நம்பிவிட்டோம்
அதிகார வர்க்கத்திடம்
உதவி தேடிவிட்டோம்

யா ஙப்பார்
யா ஸத்தார்
யா கஹ்ஹார்
யா அஸீஸ் 
இந்த உம்மத்தை மன்னித்து
கஷ்டத்தைப் போக்குவாயாக!!

யா மாலிகல் முல்க் 
உன் கத்ரில் நம்பிக்கை வைக்கிறோம்
தொழுகையை கொண்டும்
பொறுமையைக் கொண்டும்
உதவி தேடச் சொன்ன ரஹ்மானே
செய்யத் தவறிவிட்டோம் !!!

தொழுகையை கைவிட்டோம்
பொறுமையை உதறிவிட்டோம்
வட்டியை வருடிக்கொண்டோம்
விபச்சாரத்தை விரும்பினோம்
ஸக்காத்தை கைகழுவினோம்

இக்லாஸை இழந்துவிட்டோம்
முகஸ்துதியை எடுத்துக்கொண்டோம்
ஒற்றுமையை ஒதுக்கிவைத்தோம்
பகைமையைப் பரப்பிவிட்டோம்
பொறாமையை அணிந்து கொண்டோம்

உன்னிடம் பிரார்த்திக்காதோரை
எதிரி கொண்டு
அழித்து விட்டு
புதியதோர் சமுகத்தை
உன்னைப் பிராத்திப்பதற்காய்
கொண்டு வருவேன் என்றாயே

பாவங்களை ஏற்றுக் கொள்கிறோம்
பாவி எம்மை மன்னித்தருள்
பாதகரின் கையை விட்டும்
பக்குவமாய் காத்தருள் !!!

பாவி அவன் பஸ்ஸாரையும்
பாதகன் விராத்தையும்
நவீன பிர்அவ்ன் புட்டினையும்
உன்சக்தி கொண்டு அழித்துவிடு
யா கஹ்ஹார்
யா ஜப்பார்
யா அஸீஸ்!!!!!

#சமூன்_றமழான்# 16/12/2016

6 comments:

  1. By the permission of Allah, PEN has more power that wake up the Ummah..

    ReplyDelete
  2. Dua is the weapon of a believer. If we do not use it for our fellow brothers at this critical juncture what else could be done.

    ReplyDelete
  3. assath யை குறை சொல்லி எந்தவொரு பயனும் இல்லை. இது இந்த போரை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் செய்த தவறே . அவர்களின் கைகளாலேயே அவர்கள் அழிவை தேடிக்கொண்டு விட்டனர். ஆட்சி மாற்றம் தேவையென்றால் அதை தமக்குள் பேசி தீர்க்கவேண்டும் . மாறாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதம் தருகிறது எனபதற்காக ஆயுதம் ஏந்தவேண்டிய எந்தத்தேவையுமில்லை. இந்தபெறும் தவறையே அவர்கள் செய்தார்கள். எல்லா உயிரழப்புகளுக்கும் யுத்தத்தை ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள்தான் முழுப்பொறுப்பையும் பாவத்தையும் ஏற்க வேண்டும். இதையே நடுநிலையாக சிந்திக்கூடிய அரபிகளும் இன்று கூறுகின்றனர் .

    ReplyDelete
  4. You first need to know the reality and the truth about Syrian internal problem. Don’t spread false information and don’t be foolish. Your poem may be welcomed if you add more words to praise President Assad and Russian president Putin, because they worked to put an end to the Aleppo war and suffering of people of Aleppo in a proper manner in a short time while the US, UK, France and other country which support terrorism, prevented it in various ways and they failed as well because of the Syrian’s determination.


    Don’t worst your time and energy on a matter which will never have any influence in you. And also your error full expectations, due to your misunderstanding and your Islamic radical views, will never come true; these types of your efforts are not useful to you, Syrian people or to anyone else. But it may somehow help to add more fuel to fitnas among already divided local Islamic communities.

    ReplyDelete

Powered by Blogger.