வர்தாவின் அகோரம், களம் இறங்கியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புயலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கின்றது
தெருக்களிலும் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையினால் போக்குவரத்து பாதித்தும், கடுமையான மழையினால் மக்கள் வீட்டைவிட்டு வரமுடியாத நிலையில் இருப்பதாலும் இன்னும் பல பாதிப்புகள் இந்த கடும் புயலால் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது
ஒரு மனிதனை வாழவைத்தவன் ஒட்டுமொத்த சமூகத்தையும் வாழவைத்தவன் போலாவான் என்ற குரான் வசனத்திற்கு ஏற்ப தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ மாநில தலைமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவ புயலால் பாதிக்கப்படாத மற்ற மாவட்டங்களில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்களை அழைக்கின்றது
நன்மையை நாடி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் சகோதரர்கள் உங்கள் பகுதி தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்
நன்மைகள் செய்ய போட்டிபோடுவோம் இறைவனின் நன்மையை நாடி மட்டுமே
இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு , புயல் பாதிப்பிலிருந்து அணைத்து மக்களையும் இறைவன் பாதுகாக்க ஏக இறைவனை பிரார்த்திப்போம் .
சென்ற வருட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் களமிறங்கி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே.
-முத்துராஜா-
அண்மைக்காலமாக முஸ்லிம் சமுகம் பல்வேறு வழிகளில் இன மத மொழி வேறுபாடின்றி உதவி செய்துவருகின்றது. மாஷாஅள்ளாஹ்.
ReplyDeleteஅனர்தங்கள் விஷேட நிலமைகளின் போது மட்டுமல்லாது இஸ்லாமிய வாழ்வொழுங்கின் ஓர் அங்கமாக இத்தகைய முன்மாதிரிகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மாறாக இத்தகைய செயற்பாடுகளின் மூலம் மற்றவர்களின் இதயங்களை ஈர்க்கலாம் என்றிருந்தால் அள்ளாஹ்வின் உதவிகூட கிடைக்காது போகலாம்.
இவை மட்டுமன்றி வியாபாரம் கொடுக்கல் வாங்கல் பொதுசனதொடர்பு குடும்பவாழ்க்கை உறவுமுறைகளைப்பேணல் பக்கத்துவீட்டாரை அனுசரித்தல் என எமது வாழ்வியலை களத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றிபெறுவோம்.
SLTJ & TNTJ they are genuine and May Allah accept them..?
ReplyDeleteThey don't need any Earppugal...!!!!
TNTJ & SLTJ vai Ethiriyaaha paarkkum evarukkum ithu oru saavu mani...
ReplyDelete