Header Ads



''முஸ்லிம் கூட்டமைப்பு'' - ஒரு கட்சியின் அலட்சியத்தினால், இல்லாமல் செய்யப்பட்டது - அப்துர் ரஹ்மான்

அர­சியல் யாப்­பு­ரு­வாக்க விட­யத்தில் சிவில் சமூகம் காட்­டிய அக்­க­றை­யி­னையும், பொறுப்­பு­ணர்­வி­னையும் கூட முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பிர­தி­நி­தி­களும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக இல்லை. இந்த அச­மந்தப் போக்கு முஸ்லிம் சமூ­கத்­திற்கு அபா­ய­க­ர­மா­னது என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.ந.தே.மு.வின் தவி­சாளர் தன­த­றிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நமது நாட்டின் எதிர் காலத்­தையும், சிறு­பான்மை மக்­களின் ஒட்டு மொத்த நலன்­க­ளையும் நேர­டி­யாக தீர்­மா­னிக்கப் போகின்ற ஒன்­றாக புதிய அர­சியல் யாப்பு அமையப் போகின்­றது.  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்  மக்கள் வழங்­கிய ஆணை­யா­னது வெறு­மனே ஆட்சி மாற்றம் ஒன்­றிற்­காக வழங்­கிய  ஆணை கிடை­யாது.

அது இந்­நாட்டின் ஆட்சி முறையில் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக வழங்­கப்­பட்ட ஆணை­யாகும். அந்த மாற்­றத்­திற்­காக சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்­தனர். ஆட்சி மாற்றம் ஒன்று நடை­பெ­றா­விட்டால் எதிர் காலம் படு­மோ­ச­மாக அமைந்து விடும் என்ற அபா­யத்தைத் தெரிந்து கொண்­டேதான் , பெரும் அபா­யங்­க­ளுக்கு மத்­தியில் சமூக உணர்­வு­டனும் நாட்டுப் பற்­று­டனும் ஆட்சி முறை மாற்­றத்­திற்­கான அந்தப் பங்­க­ளிப்­பினை நமது மக்­களும் வழங்­கி­னார்கள்.

அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் மத கலா­சார தனித்­து­வங்கள், உரி­மைகள் என்­பன உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு ,  நாட்டின் ஆட்­சி­முறைக் கட்­ட­மைப்­புக்­களில் அனைத்து மக்­களும் பங்­கேற்கக்­கூ­டிய , ஊழல் மோச­டிகள் அற்ற, தேசிய நல்­லி­ணக்கம் கொண்ட ஒரு புதிய இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே அனை­வ­ரி­னதும் கன­வாக இருந்­தது. அதனைச் செய்வோம் என்ற வாக்­கு­று­தி­யினை தற்­போ­தைய அர­சாங்­கமும் வழங்­கி­யி­ருந்­தது. அதற்­கேற்ற வகையில் இலங்­கைக்­கான புதிய யாப்பு உரு­வாக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தியும் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­க­மை­வா­கவே தற்­போது யாப்­பு­ரு­வாக்க நட­வ­டிக்­கைகள் மேற் கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தற்­போது இறு­திக்­கட்ட நிலைக்கு வந்­தி­ருக்­கின்­றது.

யாப்­பு­ரு­வாக்க நட­வ­டிக்­கையின் முதற்­கட்­ட­மாக பொது மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்­கைகள் நாடு­பூ­ரா­கவும்  மேற் கொள்­ளப்­பட்­டன. இரண்டாம் கட்­ட­மாக, கடந்த ஜன­வரி மாதம் பாரா­ளு­மன்றம் யாப்பு நிர்­ணய சபை­யாக பாரா­ளு­மன்றம் மாற்­றப்­பட்­டது. இதன் அடுத்த கட்­ட­மாக, புதிய யாப்பில் உள்­வாங்க வேண்­டிய விட­யங்­களை தனித்­த­னி­யாக கையாள்­வ­தற்­கான ஆறு பாரா­ளு­மன்ற உப குழுக்கள் அமைக்­கப்­பட்­டன.  அந்த உப குழுக்கள் தமது கலந்­தா­லோ­ச­னை­களை நிறைவு செய்து தத்­த­மது அறிக்­கை­க­ளையும் தற்­போது வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.  அடுத்­த­கட்­ட­மாக இந்த அறிக்­கை­களில் சொல்­லப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வுகள் அனைத்தும் பாரா­ளு­மன்­றத்தில் விரி­வாக விவா­திக்­கப்­பட்டு இறுதி தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

ஆரம்­பத்தில் பொது­மக்­களின் அபிப்­பி­ரா­யங்கள் உள்­வாங்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில்,  முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­களும், அமைப்­புக்­களும் மிகுந்த ஆர்­வத்­தோடும் அக்­க­றை­யோடும் தமது அபிப்­பி­ரா­யங்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யி­ருந்­தனர். அத்­தோடு, சாத்­தி­ய­மான எல்லா வழி­க­ளிலும் புதிய யாப்பு எவ்­வாறு அமைய வேண்டும் என்ற கருத்­துக்­க­ளையும் பொது தளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அந்த வகையில் யாப்­பு­ரு­வாக்க நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூகம் தனது கட­மை­யினை பொறுப்­புடன் செய்­தி­ருக்­கின்­றது. 

இவ்­வி­ட­யத்தில்,  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளி­ட­மி­ருந்தும் அவர்கள் சார்ந்த கட்­சி­க­ளி­ட­மி­ருந்தும் நிறை­யவே எதிர்­பார்க்­கப்­பட்­டன.  யாப்­பு­ரு­வாக்க விட­யத்தில் தமது சமூகம் தொடர்­பா­கவும் தமது நாடு தொடர்­பா­கவும் அவர்­களின் கட­மைகள் ஏரா­ள­மாக இருக்­கின்­றன. ஆனால், சிவில் சமூகம் காட்­டிய அக்­க­றையின் அள­வுக்குக் கூட இவர்கள் அக்­கறை காட்­டி­யி­ருக்­கின்­றார்­களா என்­பது கேள்விக் குறி­யா­கவே இருக்­கி­றது.

தத்­த­மது பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வங்­களை பாதிக்­கக்­கூ­டிய விட­ய­மான தேர்தல் திருத்த விட­யத்தில் மாத்­திரம் ஓர­ளவு அக்­கறை காட்­டு­கின்ற இவர்கள் சமூ­கத்­தி­னதும் நாட்­டி­னதும் ஏரா­ள­மான நலன்­களைப் பாதிக்­கின்ற ஏனைய விட­யங்­களில் அக்­க­றை­யின்றி மௌனம் காப்­ப­தா­கவே தெரி­கி­றது.

யாப்­பு­ரு­வாக்க ஆலோ­ச­னை­க­ளுக்­கென நிர்­ண­யிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற உப­கு­ழுக்கள் அனைத்­திலும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அங்­கத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றார்கள். அந்த ஒவ்­வொரு குழுக்­களும் தத்­த­மது விடயத் தலைப்­புக்­களில் ஏரா­ள­மான அமர்­வு­களை நடாத்­தி­யி­ருக்­கின்­றன. ஏரா­ள­மான விட­யங்கள் பேசப்­பட்டும் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டும் உள்­ளன.

ஆனால் இந்தக் குழுக்­களில் என்­ன­வென்ன விட­யங்கள் பேசப்­பட்­டன என்­பது பற்றி இக்­கு­ழுக்­களின் அறிக்கை கடந்த நவம்பர் 19ம் திகதி வெளி­யாகும் வரை நமது சமூகம் அறிந்­தி­ருக்­க­வில்லை. ஒவ்­வொரு குழுக்­க­ளிலும் பேசப்­படும் விட­யங்­களை சிவில் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­க­ளோடும் புத்­தி­ஜீ­வி­க­ளோடும் இந்தக் குழுக்­களில் அங்­கத்­துவம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெளிவு படுத்தி ஆேலா­சித்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு எதுவும் நடை பெற­வில்லை. அது நடந்­தி­ருந்தால் சக­ல­ரது ஆலோ­ச­னை­க­ளையும் பெற்று சமூ­கத்தின் தீர்­மா­னங்­களை அந்­தந்தக் குழுக்­களின் முன் மொழிவு அறிக்­கை­களில் இணைத்துக் கொண்­டி­ருக்க முடியும். அந்த அரு­மை­யான சந்­தர்ப்­பமும் தவ­ற­வி­டப்­பட்­டுள்­ளது என்­பது பெரும் துர­திஷ்டமாகும்.

மேலும், அதி­காரப் பர­வ­லாக்கல் விடயம் தொடர்­பா­கவும் சில முக்­கிய அர­சியல் பிர­மு­கர்கள் காட்டி வரும் மௌனம் ஆச்­சர்யம் தரு­கி­றது. சில முஸ்லிம் கட்­சிகள் வட கிழக்கு இணைப்பு போன்ற பார­தூ­ர­மான விட­யங்­களில் மறை­மு­க­மான ஒப்­பு­தல்­களை வழங்கி விட்­டதோ என்­கின்ற அச்­சமும் இப்­போது சமூ­கத்தில் எழத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

யாப்­பு­ரு­வாக்கம் என்­ப­தனை ஒரு கட்­சி­யி­னு­டைய நலன்­க­ளுடன் அல்­லது ஒரு சில அர­சியல் வாதி­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுடன் மட்­டுப்­ப­டுத்­து­வ­தா­னது பெரும் ஆபத்­தாகும். மாறாக மக்­க­ளு­டைய நலன்­க­ளையும் நாட்­டி­னு­டைய நலன்­க­ளையும் மட்­டுமே அடிப்­ப­டை­யாகக் கொண்டு  இவ்­வி­டயம் அணு­கப்­பட வேண்டும். இதற்கு வெளிப்­ப­டை­யான, பொறுப்புக் கூறத்­தக்க, கட்சி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்ட ஒரு கூட்டு அணுகு முறை அவ­சி­ய­மாகும்.

என­வேதான், முஸ்லிம் அர­சியல் வாதிகள் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்த ஒரு கூட்­ட­மைப்­பினை உரு­வாக்­கு­வதும் அக்­கூட்­ட­மைப்­பா­னது சிவில் சமூக கட்­ட­மைப்­பு­க­ளுடன் கூட்­டி­ணைந்து இயங்­கு­வதும் அவ­சியம் என்­பது ஆரம்­பத்தில் இருந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வந்தது. அந்த சிறந்த ஆலோசனை கூட ஒரு முஸ்லிம் கட்சியின் அலட்சியமான போக்கின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டது. அவ்வாறான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்குமேயானால் பாராளுமன்றத் தெரிவுக்குழு அனைத்து அறிக்கைகளிலும் நமது சமூகத்தின் ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் உள்வாங்கியிருக்க முடியும். 

எனவே, எமது மக்களினதும் நாட்டினதும் தலையெழுத்தினை அடுத்த பல தசாப்தங்களுக்கு தீர்மானிக்கப் போகின்ற புதிய யாப்பு விடயத்தில் இந்தக் கட்டத்தில் இருந்தாவது ஒரு சமூகம் சார்ந்த கூட்டிணைந்த அணுகுமுறையினை நாம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். ஒரு சில அரசியல் கட்சிகளும் ஒரு சில அரசியல் வாதிகளும் தத்தமது தேவைகளின் அடிப்படையில் புதிய யாப்பு விடயத்தில் நடந்து கொள்வதனை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

No comments

Powered by Blogger.