வலுகைத் தலையாக்கிய பெண், பாடம் புகட்டிய நீதிபதி - கொழும்பில் சம்பவம்
தவறான மருந்தை வழங்கி பெண் ஒருவரை வலுகைத் தலையாக்கிய மற்றுமொரு பெண்ணுக்கு 50000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த பெண் ஒருவர், மருந்து வாங்க வந்த பெண்ணுக்கு பிழையான மருந்தை வழங்கியுள்ளார்.
இந்த மருந்தைப் பயன்படுத்திய குறித்த பெண்ணின் தலைமுடிகள் முற்று முழுதாக கொட்டியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, 50000 ரூபா அபராதம் விதித்ததுடன், பிழையை ஒப்புக் கொண்டு பத்திரிகையில் பொதுமன்னிப்பு கோருமாறு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு சரத்தின் அடிப்படையில் இலங்கையில் பிரசுரமாகும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் தவறை ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதப் பணத்தை செலுத்தத் தவறினால் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் கடமையாற்றிய டப்.ஏ. தமயந்தி பிரியா பெண் ஒருவரே தண்டிக்கப்பட்டுள்ளார்.
முல்லேரியாவில் வதியும் உபுல் குசாந்த கவிதிலக்க என்பவர், தமது அத்தைக்கு முழங்கால் வலிக்கு மாத்திரை பெற்றுக்கொண்டதாகவும், அந்த மாத்திரைகளை அருந்திய போது ஒவ்வாமை ஏற்பட்டு முடிகள் கொட்டியதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி இந்த முறைப்பாடு செய்பய்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் மருந்தக உரிமையாளர், மருந்தாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment