'இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல்களை களைவதற்கு, இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காது'
(ஆதில் அலி சப்ரி)
பொதுபல சேனா அமைப்பினர் உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்பிவைத்தால், அதற்கு தகுந்த பதிலை சர்வதேச மற்றும் தேசிய துறைசார்ந்தோரின் ஆலோசனைகளைப் பெற்று பதிலளிக்க தான் தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பொதுலசேனா அமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பினர் தனது பாராளுமன்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கோ, தனிப்பட்ட மின்னஞ்சலுக்கோ கடிதமொன்றை அனுப்பியிருக்கவில்லை. தானும் இணையத்தளமொன்றிலேயே அந்த விடயத்தை பார்வையிட்டதாகவும், முறையாக, உத்தியோகபூர்வமாக அனுப்பப்படாத கடிதத்துக்கு பதிலளிப்பதில் சிக்கல் இருப்பதால் கடிதம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பிடம் விளக்கம் கோரவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
இஸ்லாம் தொடர்பாக மேலெலும் சந்தேகங்களுக்கு பதிலளிப்பது என்பது எமக்கு கிடைக்கும் வாய்ப்பாகும். இதனால் இஸ்லாம் மீதான பிழையான புரிதல்கள் களையப்படலாம். எனினும் திகதி, அனுப்பியவர், யாருக்கு, கையொப்பம் போன்ற எவ்வித விடயங்களும் இல்லாத ஒரு கடிதத்துக்கு பதிலளிப்பது என்பது ஆபத்தானதாகும். நூம் முன்வந்து பதிலளித்த பின்னர் அவர்கள் அவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பிவைக்கவில்லை என்று கூற வாய்ப்புள்ளது. எனவே பொதுபலசேனா அமைப்புக்கு மேற்படி விடயம் தொடர்பான தெளிவொன்றை கேட்டு கடிதமொன்றை அனுப்பவுள்ளேன். ஆதற்கான பதிலைப் பொருத்து அவர்களுக்கு தேவையான பதிலை வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன். இஸ்லாம் தொடர்பான தவறான புரிதல்களை களைவதற்கு இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காது- என்றார்.
ஞானசாரைக்கு முக்கியத்தவம் கொடுத்ததால் வந்த விலைவு..
ReplyDeleteமுதலில் ACJUக்கு அனுப்பிய கடிதத்திற்கு சரியான முறையில் பதில் அனுப்ப சொல்லுங்கள்.ACJU தலைவர் கூறிய பதில் ஏற்றுக்கொள்ள முடியாது... அவர்களால் முடியாது என்றால் துறைசார் நிபுணர்கள் மூலம் பதில் வழங்க வேண்டும்... உரிய காலத்தில் பதில் அனுப்பாவிட்டால் முழு முஸ்லிம் சமுதாயமும் தலைகுனிய வேண்டி இருக்கும்...
ReplyDeleteWe welcome your move, minister. This is a great opportunity to dissolve all misconceptions about Islam.
ReplyDelete