Header Ads



“ஹிஸ்புல்லாவின் ஆயுதம்”

பாராளுமன்றத்தில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஆற்றிய உரை பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் பேசியது சரியா? அல்லது பிழையா? என்ற வாதம் பரவலாக பேசப்படும் ஒரு கருப்பொருளாகியுள்ளது.  இதனை சில ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தமது அறிவுக்கு எட்டியவாறு பல விடயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தனர். இந்த விடயத்தில் சிலர் நடுநிலையாகவும் - இன்னும் சிலர் பக்கச்சார்பாகவும் எழுதியிருந்தனர். அதில் வரவேற்கத்தக்க கருத்துக்கள் இருந்தாலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

ஹிஸ்புல்லா பேசியது என்ன?
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் குறித்த தினத்தில் பாராளுமன்றத்தில் இருப்பதை நன்கு அறிந்த நிலையில் தனது உரை அரசாங்கத்துக்கு ஒரு பலத்த செய்தியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஹிஸ்புல்லா தனது உரையை அமைத்துக்கொண்டார். அவர் நிதானம் இழந்து பேசியதாக சிலர் விமர்சித்திருந்தனர். ஆனால், ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற வாழ்க்கையில் உரையொன்றுக்காக தயாராகி – குறிப்பெடுத்து பேசியது இதுவே முதல் முறை. அவர் தனது உரையை தெளிவாகவே பேசியிருந்தார். எனினும், அதனை சரியாக புரிந்து கொள்ளாதவர்களே செய்தியை திரிவுபடுத்தினர். இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகள் இருந்து செயற்பட்டமை தெட்டத் தெளிவு.

விஜயதாச - ஹிஸ்புல்லா கருத்து மோதல் 
ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு விஜயதாச பதில் வழங்கியிருந்தார். அதில், “யோகேஸ்வரன், ஹிஸ்புல்லாவுக்கும் கலந்துரையாடல்களில் நம்பிக்கையில்லை. அவர்கள் மக்களை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். நாங்கள் எமது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம்.” என சிங்களத்தில் கடுகடுத்தார்.  இதற்கு ஹிஸ்புல்லா வழங்கி விளக்கத்தையே சில ஊடகங்கள் தமது செய்திகளில் காண்பித்தன. அதில், “நான் நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன் - ஆதரிக்கின்றேன். கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்களே உறுதியாகவுள்ளோம். நீங்கள் நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்” என்றார். 

இந்த கருத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாதவகையில், முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக சாடி விஜயதாச பேசியிருந்தார். அவரது கருத்தில் சில உண்மைகள் இருந்தாலும், அவர் பொதுப்படையாக கூறிய விடயத்தை ஹிஸ்புல்லாவுக்கு மாத்திரம் கூறிய ஒன்றாக சிலர் வடிவமைத்துக் கொண்டனர்.

இவ்வாறான பின்னணியில் இடைவேளைக்குப் பின்னர், ஹிஸ்புல்லவுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் அவர் விஜயதாச உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவான விளக்கத்தை வழங்கியிருந்தார். அவர் அதில் பல முக்கிய விடயங்களை பேசியிருந்தார். அதில் “இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள்  ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படலாம். இந்நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது” என்ற வகையில் தனது உரையில் தெட்டத்தெளிவாக குறிப்பிட்டார். இதனை சிலர் அரசியல் நோக்கங்களுக்காக திரிவுபடுத்தி அந்த உரையின் கருத்தாழத்தை மறைத்து விட்டனர்.  

ஹிஸ்புல்லா தனது உரையில் “ஆயுதம் ஏந்துவேன் என்றோ - ஏந்துவோம் என்றோ” குறிப்பிடவில்லை. ஆயுத கலாசாரத்தை முஸ்லிம்கள் வெறுக்கின்றனர் என்ற அர்த்தத்திலேயே அவர் பேசியிருந்தார். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் இந்த உரையில் அவர் கடுமையாக தெரிவித்தார்.  ஹிஸ்புல்லாவின் உரைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். நாட்டின் பிரதான கட்சியொன்றின் முக்கிய உறுப்பினர் என்ற ரீதியில் அவர் பேசிய விடயம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனாலேயே ஜனாதிபதி, பிரதமர் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர். அத்துடன், ஜனாதிபதி முஸ்லிம் எம்.பிக்களை சந்தித்தும் பேசியிருந்தார். 

உரையின் பின்னணி
மஹிந்த ஆட்சியில் சம்பிக்க ரணவக்க ஏற்றிருந்த கதாபாத்திரத்தை தற்போது விஜயதாச ராஜபக்ஷ ஏற்று கச்சிதமாக முன்னெடுத்துச் செல்கின்றார். சிங்கள தேசியவாத அமைப்புக்களின் கோரிக்கைகள் நியாயபூர்வமானது என்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்கள் வரும் நிலைக்கு மூளை சலவை செய்துள்ளார் அவர். இந்த விடயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த பின்னணியில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையாக பேச வேண்டும் ; முஸ்லிம் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்ற நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதுயுதீன் உள்ளிட்ட முஸ்லிம் தலைமைகள் சிலர் பாராளுமன்றத்தில் உரையாற்றினர்.   எனினும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஹிஸ்புல்லா கூறியதனால் அவரது உரை பெரும் தாக்கத்தை – அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. 

“ஹிஸ்புல்லாவின் ஆயுதம்”
1989ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிஸ்புல்லா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால போராளி. தலைவர் அஷ்ரபுடன் இணைந்து கட்சியை வளர்த்ததில் அவருக்கும் பெரும் பங்குள்ளது. 2000ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக பேரியல் அஷ்ரபுடன் இணைந்து தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றார். 1983 இல் வெறும் 20 வயதில் தனது அரசியல் செயற்பாட்டை ஆரம்பித்த ஹிஸ்புல்லா, பல்கலைக்கழக மாணவராக இருக்கும் போதே மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடக்குமுறைகள் தலைவிரித்தாடிய காலத்திலேயே “அரியல் தான்; எமது ஆயுதம்” என குறிப்பிட்டவர் ஹிஸ்புல்லா. அன்று மட்டு. முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தை வழங்கி ஆயுத கலாசாரத்திலிருந்து மீட்ட பெறுமை அவருக்கே சாறும். அவ்வாறான அரசியல் தலைவர் ஒருபோதும் முஸ்லிம்களை பிழையாக வழிநடத்தமாட்டார். அவர் பாராளுமன்றத்தில் பேசியது முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமே. எனவே, ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையை வேண்டுமென்றே திரிவுபடுத்தி மக்களை குழப்ப முற்படுவது தவறான செயலாகும்.

விமர்சனங்கள்
கடந்த ஆட்சியில் ஹிஸ்புல்லா மாத்திரம் மஹிந்தவுடன் இருக்கவில்லை. ஹக்கீம், ரிஷாட் உள்ளிட்ட முக்கிய முஸ்லிம் தலைமைகள் அனைவருமே மஹிந்தவுடனேயே இருந்தனர். எனவே, கடந்த ஆட்சி தொடர்பில் விமர்சனம் முன்வைக்கின்றவர்கள் பொதுவான விமர்சனமே முன்வைக்க வேண்டும். 

“ஹிஸ்புல்லா இப்போது ஏன் பேசுகிறார் அப்போது பேசினாரா” என கேள்வி எழுப்புபவர்கள் கடந்த கால அரசியல் நிலைவரம் தெரியாதவர்களே. அளுத்கம் கலவரம் இடம்பெற்ற முதல் நாள் வெளிநாட்டிலிருந்த ஹிஸ்புல்லா தனது அனைத்து வேலைகளை ரத்து செய்து விட்டு உடனே மறுநாள் அதிகாலை 5 மணிக்கு இலங்கை  வந்தார். கலவரத்தின் இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு முதல் அரசியல் வாதியாக பேருவளை- அளுத்கமைக்கு சென்றது ஹிஸ்புல்லாவே. அதனை அங்குள்ள மக்கள் மறக்கவில்லை இங்குள்ள விமர்சகர்களே மறந்துள்ளனர்.  அளுத்கம கலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் அரசாங்கத்தை சாடி ஹிஸ்புல்லாவும் பேசியிருந்தார். அவரது உரை கடுமையாக அமைந்தமையாலேயே ராஜபக்ஷர்கள் அவருக்கு எச்சரிக்கைவிடுத்தனர். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஆட்சியிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் கலந்துரையாடல்களுடன் மாத்திரமே நின்றுவிட்டன. இப்போதும் அதே நிலையே உருவாகியுள்ளது.  சிறுபான்மையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வற்புறுத்தி – எச்சரித்து பெற்றெடுப்பதில் தவறில்லை. 

இனவாதிகளுக்கு வாய்ப்பா?
ஹிஸ்புல்லாவின் உரை இனவாதிகளுக்கு பேசுபொருளாக மாறியுள்ளதாகவும் வீண் பிரச்சினைக்கு தூண்டுகோலாக அது அமைந்துள்ளதாகவும் சிலர் விமர்சனம் முன்வைத்திருந்தனர். இந்த விடயத்தை குறுகிய பார்வையில் பார்ப்பவர்களுக்கே அவ்வாறு தெரியும். ஏன் எனில், இலங்கையில் இனவாத பிரச்சினை அரச அனுசரணையுடன் அரங்கேறிய காலத்தில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இதனை விட கடுமையான வார்த்தைகளையும் - அறிக்கைகளையும் விட்டிருந்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.  அன்று ஒரு அரசியல்வாதி “ஆயுதம் ஏந்துவோம்” என்றே குறிப்பிட்டு சிக்கலில்மாட்டியிருந்தார். அப்போது, அந்த விடயம் இனவாத அமைப்புக்களால் எந்தளவு ஊதி ஊதி பெரிதுபடுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, ஹிஸ்புல்லாவின் உரை இல்லாத பிரச்சினைக்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது என குறிப்பிடுவது நியாயமற்ற விமர்சனமாகும். 

நாட்டின் நிகழ்கால பிரச்சினைகளையே ஹிஸ்புல்லா பேசியிருந்தார். அவரது உரையில் குறைகள் - தவறுகள் இருந்தாலும் அதில் குறைகாண்பவர்களாக மட்டும் முஸ்லிம்கள் இருப்பார்களாயின், விமர்சனங்களுக்க அஞ்சி  முஸ்லிம்களின் பிரச்சினைகளை தொடர்பில் தெளிவாக பேசுவதற்கு இனி எந்த முஸ்லிம் தலைமையும் முன்வரமாட்டார்கள் என்பதே யதார்த்தம்.  ஆர். ஹஸன்

7 comments:

  1. நல்லதோர் தெளிவுக்கட்டுரை , ஹிஸ்புல்லாஹ் சேர் பேசியதால்தான் பிரட்சினை வரவேண்டுமென்றில்லை, சாதாறணமாகவே கலவரத்தை உண்டுபண்ணி வர்தக நிலயங்களை அழித்தனர், உயிர்களிலும் மார்க்கத்திலலும் கைவைக்க முற்பட்டனர்முற்பட்டனர்.

    இவ்ளவு நடந்தபின் சற்று காரமாக அமைச்சர் பேசியதை குறைகூறும் விழாங்காய்கள் ; பிரட்சினை தொடங்கியபோது பேசியிருந்தாலும் இப்போது போல் பொறுமைகாப்போம் எண்றே கொக்கரித்திருப்பர்.

    முடிந்தால் பேசுங்கள், இல்லாவிட்டால் இரண்டயும் மூடிக்கொண்டு சொந்தவேலயை கவனியுங்கள், விமர்சிக்கவும் ஒரு தைரியம், வக்கனை வேண்டும்.

    ReplyDelete
  2. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பேசியதை கவனமாகவும் நடுநிலையாகவும் இருந்து கேட்டால் ஒரு சிறுபிள்ளிளைக்குக்கூட நன்றாகப்புரியம். அதில் எந்த இனவாதமொ அல்லது தீவிரவாத்த்தை தூண்டும் கருத்துக்களோ இல்லை என்று. ஆனால் இனவாத்த்தை வேண்டுமென்றே தூண்டபவர்களும் , அரசியல் இலாபம் தேடுபவர்க்களுமே இதனை திரிபுபடுத்துகின்றனர்.

    ReplyDelete
  3. நீங்கள் பேசினாலும் பேசாவிட்டாலும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் ஏக இறைவனைக் கைவிடாதவரை முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுவர் அதுதான் வரலாறும் உண்மையும் வாய்மூடி மௌனியாக இருப்பதை விட சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு மரணித்தாலும் பரவாயில்லை (அது உண்மையானால்) இந்த விடயத்தில் அந்த ஞானசார உலகில் எங்கும் எவரும் பாவிக்காத விதத்தில் ஏக இறைவனை கொலுவெல்லலா என்கிறால் படைத்தவனுக்கு குழியபப்பிட்டியில் பன்றி உருவில் ஊர்வலம் செய்கிறான்கள் பாவிகள் உள்ளம் குமுறுகிறது வாயையும் மற்றதையும் பொத்தி இருக்கவா சொல்கிறார்கள் என்னைப் பொறுத்தவரை எமது சமுகத்தின் குமுறலை ஓரளவேனும் சொன்ன ரிசாட் மற்றும் சகோததர் கிஸ்புல்லாh போன்றோருக்கு அல்லாh மேலும் உறுதியளிப்பானாக மற்றும் சமுகத்தைக் காட்டிக்கொடுத்து பிளைப்பு நடத்தும் அஸாத் சாலி மற்றும் கப்ர் முட்டிகளின் சுய ரூபத்தை சமகத்துக்கு வெளிக்காட்டுவானாக

    ReplyDelete
  4. Nalla wakkalattu pani Todarattum

    ReplyDelete
  5. அழகான கட்டுரை,ஹிஸ்புல்லாஹ் பேசியது தெளிவான தமிழ் மொழியில்தான் அந்த தமிழை சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்து கேட்டு விடயங்களை அறிந்து பிழையான கருத்து இல்லை செரியான வாதம்தான் என்பதை விளங்கியதால் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் ஹிஸ்புல்லாவை அழைத்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்று வாக்களித்தார்கள் ஆனால் இவ்வாறு நீ பேசியது தேசிய பாது காப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என்று சொல்லவில்லை.ஆனால் நமது தமிழ் இலக்கியவாதிகளுக்கு மட்டும் அது ஆபத்தான விடயமாக விளங்கி விட்டது!!!!!!.இந்த விமைர்சனங்க்களால் இவருடைய பேச்சை பல தடவை எல்லோராலும் திரும்பத்திரும்ப கேட்டும் இவர்கள் சொல்லும் தமிழ் அதில் இல்லை.அரசியல் இலாபத்துக்காக இவ்வாறு முனபிக்குடைய முதல் அடையாளமான பொய்யை சொல்லுவது இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை.தானும் பேசமாட்டேன் நீயும் பேசவேண்டாம் என்று சொல்லும் இவர்களை நம்பி போராளிக்கூட்டம் ஓன்று இருக்கிறதே.அவர்கள் பாவம்.

    ReplyDelete
  6. In my opinion I don't find wrong on his speech.
    Some of our Muslim politicians don't even do anything or even tell the truth, because of there political future. Shame on those politicians, don't forget your accountable one day for your actions.

    ReplyDelete
  7. முஸ்லிம்களின் அரசியல்
    திசை மாற்ற படுகிறது

    இன்று பாராளுமன்றத்தில் இராஜாங்க பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஆறிய
    உரையை பற்றி வாதிட வரவில்லை
    இதன் பின்னர் எமது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனையை சிந்தனை செய்யும்போது கவலை

    ReplyDelete

Powered by Blogger.