பெரும்பான்மை அரசியல்வாதிகளின், மௌனத்தின் மர்மம்
-அமானுல்லா கமால்தீன்-
'(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்'(8:30)
இலங்கை முஸ்லிம் தலைவர்களே! விழித்தெழுங்கள்! அல்குர்ஆனில் பிழை கண்ட ஞான ஸார தேரர் இன்று அல்லாஹ்வையே பகிரங்கமாகவும் கீழ்த்தரமாகவும் திட்டத் துணிந்து விட்டார்;. பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அவிழ்க்க முற்பட்ட சம்வங்கள் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. சகோதரர் அப்துல் ராஸிக் பௌத்த மதத்தை சாடியபோது முஸ்லிம்கள் அது தவறு என்றும் அவர் எச்சரிக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர். ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் ஞானஸார தேரர் குர்ஆனையும் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்தபோது முஸ்லிம்கள்; பல முறைப்பாடுகள் செய்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக் குறைக்கு இனங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மேடைக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அழைத்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இலங்கை நாடு பௌத்தர்களுக்கு சொந்தம் என்றும், இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் வாழலாம் ஆனால் இஸ்லாத்தை பின்பற்ற முடியாது என்றும் பகிரங்கமாக கூறுகிறார்கள். இலங்கை வரலாற்றிலே முஸ்லிம்கள் ஒரு காலத்திலும் தனி நாடு கேட்டது கிடையாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்ற முடியாது என்று வரும் போது அன்மையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாரளுமன்றத்தில் கூறியது போன்று முஸ்லிம்களுடைய மூச்சே இஸ்லாம்தான். அவர்கள் வாழ்க்கை வழி முறையே குர்ஆனும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை முறையும்தான். அவர்கள் வாழ்வதே அல்லாஹ்வுக்காகத்தான். முஸ்லிமகள்; அல்லாஹ்வுடைய கட்ளைகளைப் பின்பற்றுவதை தடுக்கப்படும் போது அவனது பட்டம,; பதவி, உயிர,; உடல,; பொருள் அனைத்தையும் தியாகம் செய்ய முற்படுவார்கள்..
முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. பகிரங்கமாக பிற மதங்களை சாடுபவர்களை தண்டிக்காது முன் உரிமை கொடுத்து பேச்சு வார்தை மேடைகளுக்கு கொண்டு வருகிறார்கள். பாரிய குற்றமும் ஊழலும் புரிந்த அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் மோசடி விசாரனைகள முன் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.; இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லாத இஸ்லாத்தின் எதிரிகளால் உண்டாக்கப்பட்டு இஸ்லாமியப் பெயரில் உலகில் நடமாடு;ம் இயக்கங்களுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்தி முடக்கத் திட்டமிடுகிறார்கள். முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களை ஆவேசப்படுத்தி நாட்டில் ஒரு பௌத்த முஸ்லிம் இனக்கலவரத்தை முடக்கிவிட தூபமிடப்படுகிறது.
உலகின் முன்னேற்றமடைந்த முன்னணி நாடுகள் இலங்கையில் ஒரு கண். உலகின் இஸ்லாத்தின் எதிரிகள் இலங்கை முஸ்லிம்களில் ஒரு கண். பெரும்பான்மை அரசியல்வாதிகளின் மௌனத்தின் மர்மம் என்ன? பெரும்பான்மை அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கிருக்கும் அதிகார பலத்தை வைத்து அரசியல் சட்ட யாப்பை பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சார்பாக மாற்ற தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறர்ரகள் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. வெளித் தோற்றத்தில் ஞானஸார தேரர் போன்றவர்களை முற்படுத்தி மக்களின் கவணத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திரைக்குப் பின்னாலே நடப்பது என்ன? எந்த ஒரு மாற்றத்தையும் சடட்த்தை வைத்துத்தான் செய்ய முடியும். இலங்கையை பௌத்த நாடாகப் பிரகடணப்படுத்தி முஸ்லிம் தனியார் சடட்ங்களை இல்லாமலாக்கி சிறுபான்மையினருக்குறிய உரிமைகளை நீக்கி மத சுதந்திரத்தை அகற்றி பொளத்த மத சட்டத்தை மட்டுமே அமுலாக்கி அனைவரும்; பொளத்த மத சட்டங்களையே பின்பற்ற வேண்டும் அல்லது ஒருவர் முஸ்லிமாக, கிறித்தவராக, இந்துவாக இலங்கையில் வாழலாம். ஆனால் அவர்கள் இஸ்லாம் மதத்தை, கிறிஸ்த்துவ மதத்தை, இந்து மதத்தை பின்பற்ற முடியாது என்று மேலே ஞானஸார தேரர் அவர்கள் கூறியதன் அர்த்தமாகும். அப்படி அவர்கள் செய்து விட்டால் அவர்கள் சிறுபான்னமையினரில் தங்க வேண்டிய ஏற்படாது என்று நினைக்கிறார்கள். சிறுபான்மையினர் சட்டயாப்பில் புறக்கணிக்கப்பட்டு விட்டால் தேர்தலில் வெற்றி பெறுபவர் எவராக இருந்தாலும் அவர் பெரும்பான்மை இனத்தை சேரந்தவராக இருப்பாரர். மக்களை பராக்காக்கி விட்டு பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதாக பூச்சாண்டி காட்டிக் கொண்டு பெரும்பான்மை அரசியல்வாதிகள் அரசியல் யாப்பை மாற்ற திரைமறைவில் மும்முரமாக செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை முஸ்லிம் தலைவர்களே! விழித்தெழுங்கள். உங்கள் முன்னைய தலைவர்கள் அரும்பாடுபட்டு போராடி பெற்றெடுத்த உரிமைகளை ஏமாந்து பறிகொடுத்து விடாதீரகள். பயப்படவோ சஞ்சலப்படவோ வேண்டாம். அல்லாஹ் விசுவாசிகளுடன் இருக்கிறான். அவர்கள்; தந்திரம் செய்கிறார்கள். அல்லாஹ்வும் தந்திரம் செய்வான். அவனோ தந்திரகாரர்கள் எல்லோரையும் விட சிறந்த தந்திரகாரன்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றுப் பாதயை மீள்வாசிப்புச்செய்வதன் மூலம் எமது இன்றைய அரசியல் நிலவரங்களை சீர்தூக்கிப்பார்க்கலாம்.
ReplyDeleteரீ.பி. ஜாயா,சேர் ராசிக் பரீட் போன்ற முன்னாள் தலைவர்கள் தான் சார்ந்திருந்த கட்சி அரசியலூடாக மட்டுமன்றி ஏனைய தேசிய கட்சிகளிடையேயும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் சமூகம்சார்ந்த உரிமைகள்,சலுகைகளைபெற்று இருப்பினை உறுதிசெய்தனர். மாறாக தனிப்பட்ட நலனகளிலிருந்து தூரமாகி நின்றதுடன் தேசிய நலன்சார் விடயங்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கிவந்தனர். இதனால் ஏனைய சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்றுக்கொண்டனர்.
ஆனால் தனித்துவத்தை முதன்மையாக கொண்டு அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்ட அன்றைய நாளிலிருந்து சமூகம் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் சென்று தன்முனைப்பு அடிப்படையில் தனிநபர்விருத்தி, பிரதேசவாதம் , அடாவடித்தனம் என்பவற்றில் மட்டுமே அக்கரைகொண்டனர். இதனால் மாற்றான் பார்வையில் முஸ்லிம்கள் பதவிக்காகவும் புகழுக்காகவும் எதையும் விட்டுக்கொடுப்பார்கள்என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்.
இதனால் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி தமிழ் தலைமைகளும் முஸ்லிம்களுக்கு எலும்புத்துண்டுகளை வழங்கிவிட்டு காரியமாற்றுகின்றனர்.
எதிர்க்கட்சியிலிருந்து முஸ்லிம்களுக்காக உரிமைக்குரல் எழுப்புவதற்கு யாருமற்ற நிலைமை காணப்படுவதும் நிழல் நிகழ்ச்சி நிரல்களை முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுசெல்வதற்கு வாய்ப்பாக அமைகின்றது. அண்மையில் அமைச்சர் ஹிஷ்புள்ளா பாராளுமன்றத்தில் பேசியபோது அவருக்கு பதிலளித்து நீதியமைச்சர் காரசாரமாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் அனைத்து முஸலிம் மந்திரிகளுக்கு எதிராகவும் கருத்துரைத்தபோது எதிர்வாதம் புரிவதற்கு திரானியற்றிருந்தமையும் எமக்கு எதிராக எதையும் செய்யலாம் என்ற நிலையை மற்றவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
எனவே சமுக மற்றும் தேசிய ரீதியாக காரியமாற்றத்தக்கவர்களை எதிரகாலத்தில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கான முன்னாயத்தங்களை இப்போதிருந்தே சமுகம் மேற்கொள்ளவேண்டும்.
மதிப்புக்குரிய அரசியல் தலைவர்ஹலே இதாய் கொஞ்சம் படிங்கள். இப்பயாவது புத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் நம்மளை சுற்றி என்ன நடக்குதன்று.
ReplyDeleteஎன்று, வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையில் முஸ்லிம்கள் கூடுவது போன்று தினமும் அதிகாலைத் தொழுகைக்காக கூடுவார்களோ அன்று கனியும் இந்தக் கனவு.
ReplyDeleteஅதுதான் உண்மை விசுவாசத்தின் அடிப்படை நடைமுறை. அதுவன்றி அடுத்தோருக்கும் நமக்கும் ஏது வித்தியாசம்?
மாற்றத்தைக் காண விரும்பும் நமக்கு முன் உள்ள கடமை இதுதான். அலார்மை வைத்து விட்டுத் தூங்குவோமா?