எண்ணெய் உற்பத்தியை குறைக்க, சவூதி அரேபியா இணங்கியது
எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறை எண்ணெய் விநியோகத்தை மட்டுப்படுத்த இணங்கியுள்ளது.
எதிர்வரும் ஜனவரி தொடக்கம் நாளொன்றுக்கு 1.2 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ஒபெக்கின் தலைவர் முஹமது பின் சலேஹ் அல் சாதா குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதோடு 2014 தொடக்கம் அது பாதிக்கும் அதிகமாக குறைவடைந்துள்ளது. இதனால் எண்ணெய் சந்தையிலும் தேக்கநிலை ஏற்பட்டிருக்கும் சூழலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒபெக்கின் இந்த முடிவை அடுத்து ப்ரெண்ட் மசகு எண்ணெய் 10 வீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்று 51.94 டொலர்களாகவும் அமெரிக்க மசகு எண்ணெய் 9 வீதம் அதிகரித்து பீப்பாய் 49.53 டொலர்களாகவும் இருந்தன.
ஒபெக் நாடுகளின் இந்த எண்ணெய் வெட்டுக்கு ஏற்ப அதன் உறுப்பு அல்லாத எண்ணெய் ஏற்றுமதி நாடுகளும் தனது உற்பத்தியை நாளொன்றில் 600,000 பீப்பாய்களை குறைக்க எதிர்பார்ப்பதாக ஒபெக் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக ரஷ்யா நாளொன்றுக்கு 10 மில்லியனுக்கும் அதிக பீப்பாய் மசகு எண்ணெயை உற்பத்தி செய்யும் நிலையில் அது நாளுக்கு 300,000 பீப்பாய்களை குறைக்க எதிர்பார்த்துள்ளது.
“உலக பொருளாதாரத்தின் நலனை கருதி ஒபெக் உறுப்பு நாடுகளும் ஒபெக் உறுப்பு அல்லாத நாடுகளும் பொறுப்புடன் எட்டப்பட்ட உடன்பாடு” என்று அல் சாதா குறிப்பிட்டார்.
வியன்னாவில் நேற்று முன்தினம் நடந்த ஒபெக் நாடுகளின் கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை 10 வீதம் அளவுக்கு குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு நாளும் 12 லட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படும்.
உலகில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியா 4.5 வீதம் எண்ணெய் உற்பத்தியை குறைக்க இணங்கியுள்ளது. இதனால் சவூதி மாத்திரம் 5 இலட்சம் பீப்பாய் உற்பத்தியை குறைக்க உள்ளது.
எண்ணெய் விலை குறைந்திருப்பதால் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
DO NOT CURSE ANYONE
ReplyDeleteAbu Huraira reported: The Messenger of Allah, peace and blessings be upon him, was told, “O Messenger of Allah, pray against the idolaters!” So the Prophet said:
إِنِّي لَمْ أُبْعَثْ لَعَّانًا وَإِنَّمَا بُعِثْتُ رَحْمَةً
Verily, I was not sent to invoke curses, but rather I was only sent as a mercy.
Abu Ad-Darda reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said:
إِنَّ الْعَبْدَ إِذَا لَعَنَ شَيْئًا صَعِدَتْ اللَّعْنَةُ إِلَى السَّمَاءِ فَتُغْلَقُ أَبْوَابُ السَّمَاءِ دُونَهَا ثُمَّ تَهْبِطُ إِلَى الْأَرْضِ فَتُغْلَقُ أَبْوَابُهَا دُونَهَا ثُمَّ تَأْخُذُ يَمِينًا وَشِمَالًا فَإِذَا لَمْ تَجِدْ مَسَاغًا رَجَعَتْ إِلَى الَّذِي لُعِنَ فَإِنْ كَانَ لِذَلِكَ أَهْلًا وَإِلَّا رَجَعَتْ إِلَى قَائِلِهَا
Verily, when a servant curses something, the curse rises to the heaven and the gates of heaven close upon it. It turns right and left and if it does not find somewhere to go, it will return to that which was cursed only if it deserved to be curse, otherwise the curse will return to the one who made it.
Ref Abu Davud 4905
Abu Ad-Darda reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said:
لَا يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ وَلَا شُهَدَاءَ يَوْمَ الْقِيَامَةِ
Those who indulge in curses will not be intercessors or witnesses on the Day of Resurrection.
Ref : Sahih Muslim 2596
Brother Ateeq...Allah knows best of King Salman and how much they have helped the Muslims around the world. If you CURSE on him is not acceptable in the sight of Allah... Be ready to bear it soon.
ReplyDeleteMuslims do not curse each other,, Rather they advice and Make Dua for them.
May Allah Guide you in right path.