Header Ads



கழற்றப்பட்டது மாணவிகளின் பர்தா, சிதைக்கப்பட்டது அடிப்படை உரிமை

மறுக்கப்பட்டது அரசியலமைப்பின் அங்கீகாரம் ! 

06/12/2016 சாதாரணதர பரிட்சையின் முதல்நாள் என்பதால் அதீத எதிர்பார்ப்புகளோடும் அபிலாசைகளோடும் கண்டி அந்தோனியர் பெண்கள்  கல்லூரியை நோக்கிச் சென்ற கடுகஸ்தோட்டை அல் ஹம்ரா  வித்தியாலயம் மற்றும் இனிகல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகளினதும் அங்கு கடமையில் இருந்த இனவாத சிந்தனையுடைய ஒரு பெண் மேற்பார்வையாளரால் பர்தாக்கள்  நிர்பந்திக்கப்பட்டுக் கழற்றப்பட்டுள்ளது என்பதை பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் உறவினர்களின் ஊடாக அறியக்கிடைத்தது .

ஆயிரம் அபிலாசைகளோடு தமது இருக்கையில் அமர்ந்த அந்த மாணவிகளுக்கு நீங்கள் பர்தாவோடு பரிட்சை எழுத முடியாது எனும் அதிகாரக்குரல் முழக்கமின்றி விழுந்த இடியாகவே  மனதில் இருந்திருக்கும்.

இனிகல முஸ்லிம் மகா விந்தியாலய மாணவிகள் எம்மால் பர்தாவினை கலற்ற முடியாது எனக்கூறிய போது அவ் இனவாத மேற்பார்வையாளப் பெண் அச்சறுத்தி பர்தாக்களை  கலற்ற வைத்திருப்பதையும் அறிய முடியுமாக இருக்கிறது . 

பல வருடங்களாக வழங்கப்பட்டு அனுபவித்துக்கொண்டு வந்த எமது முஸ்லிம் மாணவிகளின் ஆடைக்கலாச்சாரம் திடீர் என பரிட்சை மண்டபத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் எமது ஆடைக்கலாச்சாரத்தின் அங்கீகார மறுப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்திகையோ என்றும் மனதில் சில ஊகங்கள் தோன்றி நிற்கிறது .

இன்று நடந்த உரிமை மறுப்பு நாளையும் அதே மாணவிகளுக்கு இடம்பெறலாம் .

ஏன் குறித்த இனவாத செயலுக்கான எதிர்வினையும் நிரந்தர சட்டத் தீர்வையும் தம்மைத் தலைவர்களாக காட்டிக்கொள்ள முற்படும் ஜம்மியதுல் உலமாவும் எமது அரசியல்வாதிகளும் பெற்றுத்தர முயல்வதோடு மாத்திரம் நின்றுவிடாது இவ்வாறு எமது அடிப்படை உரிமையிைனையும் இலங்கை அரசியலமைப்பையும் சிதைத்தவருக்கு தண்டனையையும்  பெற்றுக்கொடுக்க முன்வராவிட்டால்

அத்தனை உரிமையினையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அகதிகளாகவோ அல்லது இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை கூட ஏற்படலாம். 

மறுக்கப்பட்டிருக்கும் உரிமையினை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தக்கூடிய தைரியம் இனவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏற்படுவதற்கு முன்பு தேசிய ரீதியிலான அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து முக்கிய பேசு பொருளாக இதனை மாற்றி இனி வரும் காலங்களில் இப்படியாக இடம்பெறவே முடியாதவாறான ஒரு சட்டப்பாதுகாப்பினை ஏற்படுத்தவேண்டிய நிர்பந்த நிலையில் இருக்கிறோம் .

சட்டம் படித்தவர்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் மௌனம் காப்பதைத் தவிர்த்து சட்டரீதியான ஜனநாயக போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலையில் உள்ளோம் .

இன்னும் ஒருசில இடங்களிலும் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெற முயன்ற ஒன்றாகப் படித்த ஆண் மாணவர்களின்  முன்னால் பர்தா இன்றிய நிலையில் மனதால் எரிந்து கொண்டும் அவமானத்தால் கூனிக் குருகியும் பரிட்சை எழுதிய மாணவிகளின் கடைசிப்பரம்பரையாக இவர்களே இருந்துவிட்டுப் போகட்டும் இனி மேலும் அப்படியொரு நிலமை வேண்டாமே...!

Nazrin Nawas

13 comments:

  1. Will our legal eagles contemplate some pre emptive action to avoid similiar issues in the future, at the same time our parents also avoid promoting covering og faces as this leads to extreme reactions.

    ReplyDelete
  2. அந்த மேற்பாரவையளரை அங்கு இருந்து அகற்ற வேண்டியதுதான்.மற்றது கழற்ற முடியாது என சொல்லி மண்டபத்தை விட்டு வெளியேறினால் யாவும் முடிவுக்கு வரும்.குட்ட குட்ட குகனிநந்தால் குட்டிக் கொண்டே இருப்பார்கள்.

    ReplyDelete
  3. மேற்பார்வையாழயே வெளியேற்ற வேண்டும் இது மாணவர்களுக்கான பரீட்சை மாணவர்களைஅசௌகரியப்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுத்தால் இவ்வாறானவர்கள் அங்குவார்கள்

    ReplyDelete
  4. அப்துல்லா அஹமத் சொல்லுவது சரி மாணவிகள் வெளிய வந்த இருக்க

    ReplyDelete
  5. Mr. Max neil... Please use descent words.

    It is not proper for a believing man or woman to use this kind of words.

    You start with WORST word but later you use Pls Pls.

    Please avoid such uncivilized word to call others human being. We are MUslim, We can not speak out of Emotion, Rather follow the guidance of Allah and then Muhammed (sal).

    I hope you will take my

    ReplyDelete
  6. முகம் மூடுவது தான் பிரச்சினை என்றால் , பொதுப் பரீட்சைகளில் தோற்றும் பொது அது மார்க்கத்தில் கட்டாயமாக்கப் பட்டதா என சிந்திப்பது சிறந்தது.

    ReplyDelete
  7. Max neil your language is uncivilized, worse than the action of examination chief of the station.

    ReplyDelete
  8. மாணவிகள் பரீட்சையை பகிஸ்கரித்து விட்டு மீட்பார்வையாளரின் அச்சுறுத்தல் சம்பந்தமான வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் .அப்போது இதட்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் .

    ReplyDelete
  9. இவ்விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவ் மேற்பார்வையாளர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படப்பட வேண்டும்

    பரீட்சை நேரத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் மனநிலையை குழப்பும் நோக்கில் செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது

    ReplyDelete
  10. dear Max please behavior is important.
    remover your bad word.

    ReplyDelete
  11. அங்கீகாரங்கள் ஏன் மறுக்கப்படுகிறது என்பதை ஆராய கடமைப்பட்டுள்ளோம்

    ReplyDelete
  12. All Muslim MPs wives do not wear the Fardha. They do not care about this fundermental rights violation against Muslim girls students.

    ReplyDelete

Powered by Blogger.