Header Ads



அந்த மக்கள், இலங்கை முஸ்லிம்களாக இருந்தால்..?

-ARM INAS-

ஒரு பாரிய புயல் வந்துகொண்டிருக்கிறது..!

அப்புயல் ஒரு தீவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது, புயல் தாக்கினால் அந்த தீவே அழிந்துவிடும், அந்த தீவில் பலர் வாழ்கின்றனர், தம்மை அழிக்க புயல் வந்து கொண்டிருப்பது அவர்களுக்கும் தெரியும்;

அந்த தீவில் உள்ள அனைவரும் தப்பித்துத் செல்ல ஒரு விமானம் இருந்தது.
அவ்வூரிலே விமானம் ஓட்டத் தெரிந்த சிலரும் இருந்தனர்
சைக்கிள் வண்டியை கூட சரியாக ஓட்டத் தெரியாத பலர் இருந்தனர்.

அந்த தீவில், சைக்கிள் வண்டியைக்கூட சரியாக ஓட்டத் தெரியாதவர்களே பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களே அதிகாரம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்.

சைக்கிள் கூட சரியாக ஓட்டத் தெரியாதவர்கள், தங்களில் சிலரை  தெரிவுசெய்து,  தமது தலைவர்களாக  ஆக்கிக்கொண்டனர்.

சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத இவர்களிடம், விமானத்தை ஓட்டி  சமூகத்தை புயலில் இருந்து காப்பாறும் பொறுப்பையும்அந்த தலைமைகளிடம் ஒப்படைத்தனர். பெரும்பான்மையாக வாழ்ந்த சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள்

விமானம் ஓட்டத் தெரிந்தவர்களில் சிலர், இதனை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

இவர்கள்  விமானம் செலுத்தினால் சமூகமே அழிந்து விடும் என்று ஒரு சிலர் இதனை எதிர்த்தனர்;

இன்னும் சிலர்

சமூக ஒற்றுமை தான் முக்கியம், பெரும்பான்மை அவர்களின் பக்கமே இருக்கிறது, நாம் அவர்களை எதிர்த்து சமூகத்iதை குழப்ப கூடாது என்று சைக்கிள் ஓட்டத் தெரியாத குழுவின் தலைர்வகளுடன் இணைந்து அந்த தலைமைகளுக்கு ஜால்ரா அடித்தனர்.

சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதவர்கள், விமானம் ஒட்டுவதனை எதிர்த்தவர்களை குழப்பக்காரர்கள், பித்னாக்காரர்கள் என்று  பட்டம்சூட்டி பெரும்பான்மையான சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் ஓதுக்கினர்.

அது மட்டுமல்ல

அடுத்த விமானிகள் போல் மௌனமாக இருக்கலாம் அல்லது எமது தலைவர்களுடன் இணைந்து செயற்படலாம்தானே, நம்மை எதிர்க்கும் விமர்சிக்கும்  இந்த ஒன்று இரண்டு விமானிகளுக்கு சமூகத்தில் வீண் குழப்பங்களை ஏற்படுத்தாமல். என்று சொன்னார்கள்.

புயலில் இருந்து முழு சமூகத்தையும் காப்பாற்ற இருக்கும்  அந்த விமானத்தை,  சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதவர்கள் ஓட்ட முயற்சிக்கின்றனர்.

விமானம் ஓட்டத்  தெரிந்த பெரும்பாலானோர் அதனை மௌனமாக இருந்து அங்கீகரித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மடத்தனத்தை எதிர்க்கும், ஒன்று இரண்டு விமானிகள்  எழுப்பும் அபாய எச்சரிக்கை யாரின காதிலும் விழவில்லை

சைக்கிள் ஓட்டத் தெரியாதவர்கள் போடும் கூச்சலில்..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அந்த தீவு இலங்கை தீவாக இருந்தால், அந்த மக்கள் இலங்கை முஸ்லிம்களாக இருந்தால்

விமானிகள் யார்..?

சைக்கிள் கூட ஓட்டத் தெரியாமல்  விமானம் ஓட்டும் பொறுப்பை சுமந்திருப்பவர்கள் யார்?

சமூகம் புயலால் அழியப் போகிறது, சமூகம் அழிந்தால், அதற்கு யார் அதிகம் பொறுப்பு?

மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?

சமூகத்துக்கு வழிகாட்டி சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றாத பாரிய தீமையை மறுமையில்   சுமக்கப் போபவர்கள் யார்..??

3 comments:

  1. ماشاءالله அதில் நிறைய யதார்த்தம் உள்ளது,சமூகம் என்ற நோக்கோடு பார்த்தால் பெறும் விளக்கம் உள்ளது,

    ReplyDelete
  2. I am sure there will by some.. who does not even to paddle cycle will oppose the above post by their negative comments.

    BUT It already to late.. BUT time for qualified people not to be silent but to unit and save the society from the fitna to come and from the ignorance who take the leadership and not doing anything due to their level of knowledge in DEEN and Worldly affairs.

    May Allah Bless the brother who wrote this article, which may enlighten the hearts of people.

    PEN has more power in Raising and Changing a society than any other weapons, which only can bring destruction most of the time.

    ReplyDelete
  3. தூரத்தில் இருக்கும் எதிரியை விட அருகில் இருக்கும் துரோகிகளும் கோழைகளும் ஆபாத்தானவர்கள்

    ReplyDelete

Powered by Blogger.