Header Ads



இன்டர்நெட் இல்லாமல்..?

இன்றைய நவீன உலகில் இணையதளம் இல்லாத ஒரு வாழ்க்கையை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத என்று ஒவ்வொரு இளைஞனும் சொல்லும் அளவுக்கு, மனிதர்களுடன் இரண்டறக்கலந்துவிட்டது இணையதளம்.

சொந்தம் பந்தம் இல்லாத நகரில் கூட குடியிருக்கலாம், ஆனால் இணையதளம் இல்லாத நகரில் குடியிருக்கவே கூடாது என்பது தான் இப்போதைய தாரக மந்திரம்.

ஆனால், இந்த சொந்த பந்தங்கள் நிறைந்த வாழ்க்கை தான் மனதிற்கு உத்வேகத்தை கொடுத்து, வாழ்வில் வெற்றிநடைபோட உதவியதை மறந்து இணையதளம் எனும் கடலுக்கு மூழ்கி அறிவு எனும் முத்துக்களை தேடிக்கொண்டிருக்கிறான் மனிதன்.

இணையதளம் தராத அறிவையா, நம்முடைய வீட்டில் உள்ள வயதானவர்களும், வீட்டில் உள்ள தொலைக்காட்சியும், சொந்தபந்தங்களும் தந்துவிடப்போகின்றன என்ற கேள்வியே இன்றைய மனிதர்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளத்தினை 5 நாட்கள் மட்டும் மறந்து, அதனை பயன்படுத்தாமல் இருந்துதான் பாருங்களேன்,

அப்படி 5 நாட்கள் மறந்துபோன ஒரு இளைஞனின் அனுபவம் இதோ,

எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது.

காலையில் அதிகாலை விழிப்பு, அரைமணிநேரம் வாக்கிங், நாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள செய்திதாள்களை படித்துக்கொண்டே ருசியான பில்டர் காபி.

குடும்பத்தினருடன் அமர்ந்து காலை உணவினை முடித்துவிட்டு, அலுவலகத்திற்கு செல்வேன். அங்கு எனக்கான பணிகளை மேற்கொள்ளும் நான், தவறி கூட பணியாற்றும் நேரத்தில் தேவையற்ற விடயங்களுக்காக இணையதளத்தினை பயன்படுத்தியது கிடையாது.

அலுவலகத்தில், நண்பர்களுடன் சேர்ந்து மாலை சிற்றுண்டி, கொஞ்சம் கலாட்டக்கள், அதன் பின்னர் பணியினை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவேன்.

வீட்டுக்கு திரும்பியவுடன், எனது குடியிருப்புக்கு அருகில் வசிப்பவர்களை பார்த்து சிரித்துவிட்டு சின்னதாக ஒரு ஹலோ சொல்வேன்.

குடும்பத்தினருடன் சேர்ந்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, அம்மா தயாரித்த இரவு உணவினை சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்கெல்லாம் தூங்க சென்றுவிடுவேன்.

நிம்மதியான வாழ்க்கையாக இருந்தது. எவ்வித பிரச்சனைகளும் இன்றி ஏதோ ஒரு தனி உலகத்திற்குள் வாழ்வது போன்று இருந்தது என்று கூறுகிறார்.

இது அந்த இளைஞனின் 5 நாள் வாழ்க்கை மட்டுமே, ஆனால் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு இருக்க முடியுமா? என்று அந்த இளைஞனிடம் கேள்வி கேட்டால், அதற்கு என்னை ஆயுள் கைதியாக்கி சிறையில் அடைத்துவிடுங்கள் என்று சொல்வார்.

அந்த அளவுக்கு, இணையதளம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. அன்றைய காலத்தில் இணையதளம் இல்லை என்பதற்காக காலம் மாறிவிட்ட பின்னரும் பழங்காலத்து வாழ்க்கையை பின்பற்றுவது வேடிக்கையான ஒன்றுதான்.

காலம் மாறினால் அதற்கேற்ப மனிதர்களும் மாறவேண்டும். காலத்திற்கு ஈடு கொடுத்து மனிதன் ஓடினால் மட்டுமே இந்த உலகில் அவனால் எதிர்நீச்சல் போட முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

3 comments:

  1. வினாடிகளினால் ஆனதுதான் வாழ்க்கை. யார் வினாடிகளைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறானோ அவனால்தான் வாழ்க்கையைப் பெறுமதியாக்க முடியும். இந்த உலக வாழ்க்கை உண்டு,உடுத்து,உல்லாசமாக இருந்துவிட்டு போவதற்காகத் தரப்பட்டதல்ல. எல்லாவற்றிற்கும் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வு மனிதர்களை விட்டு மறந்து போனமை இணையத்தில் அதிகம் மூழ்கிப் போவதற்கான பிரதான காரணம் எனலாம். அல்லாஹ்வின் துாதர் சொன்னார்கள். ஒரு மனிதன் கடற்கரையோரமாகச் செல்லும் போது மணலிலே தன் விரலால் கோடு கீறியதற்காகவும் விசாரிக்கப்படுவான் என. வீணே தன் விரலைக் கூட அசைக்க முடியாது என்றிருக்கும் போது எப்படி எம் அதிகமான நேரங்களை வீணே இணையத்தில் கழிக்க முடியும். இளைஞர்களே விழிப்புப் பெறுவோமாக!

    ReplyDelete
  2. areef ali யின் விளக்கம் கட்டுரையை விட மிகவும் சிறந்ததாக இருக்கிறது,ஒவ்வொரு மூச்சுக்கும் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான்.நாம் மறந்து வாழ்கிறோம்.தேவையானதை விட தேவை இல்லாத விடயங்களைதான் அதிகம் பார்க்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் மற்றவர்களின் மானத்தில் விளையாடும் நம் சகோதரர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  3. மிகத் தெளிவான ஆழமான கருத்து

    ReplyDelete

Powered by Blogger.