முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், கார்ட் போர்ட் வீரர்கள் - ஹலீம்
தமது அரசியல் இருப்பிடத்தை தக்கவைத்து கொள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கார்ட் போர்ட் வீரர்களாக முனைகின்றனர். தற்போதைய இன முறுகல் நிலைமையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்.
வீர வசனங்களினால் எதுவும் செய்யமுடியாது என தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கும் ஏனைய பிக்குமார்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வை இழிவாக பேசியமையினால் முஸ்லிம்கள் வேதனையுற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் முஸ்லிம் விவகார மற்றும் தபால் துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்;
முன்னைய ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத ரீதியாக பல இடையூறும் சிக்கலும் ஏற்பட்டன. முஸ்லிம்கள் இதனால் வேதனையுற்று இருந்தனர். இதனால் நல்லாட்சி ஆட்சியை ஏற்படுத்த உதவினர்.
நல்லாட்சி ஆட்சி பீடம் வந்த பிறகு அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். எனினும் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் மிகவும் கீழ்த் தரமான முறையில் அவதூறுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாட்டின் காரணமாக முஸ்லிம்கள் வேதனையுற்று உள்ளனர்.
எனினும் அவரது செயற்பாடுகளுக்கும் நான் நன்றாக பழகிய பிக்குகளுக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆயினும் அதற்காக அவர் வழியில் சென்று பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
இதன் பிரகாரமே ஜனாதிபதி தலைமையில் சர்வமதத் தலைவர்கள் ஒன்று கூடி பேசினோம். ஆனாலும் இதற்காக என்னை சிலர் அவமதித்து பேசுகின்றனர்.
தமது அரசியல் இருப்பினைத் தக்கவைத்து கொள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கார்ட்போர்ட் வீரர்களாக முனைகின்றனர்.
வீர வசனங்கள் மூலமாக எதனையும் செய்யமுடியாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.
MM.Minhaj
Dear Minister,
ReplyDeleteIf you can not speak when it is needed please keep quiet and let Mr. Hisbullah to speak, dont pass the negative comments. You can not say him as cardboard hero because he spoke in the parliament in front of everyone not at the petakotuwa railway station.
FYI. I am a follower of you and i appreciate all your good efforts in various ways.
Correctly said ,
DeleteBrother, Haleem Even if what you talk is correct, It is not the correct time to critizise the Minister in public, Rather Unit and Advice each other and come work out for solution.
ReplyDeleteDo not start blame each other quating the past..
Time to UNIT and Stand against the problem and Not just satisfying the silent government.. But it is also needed to show our opposition to the silent approval of RACISM.
This comment has been removed by the author.
ReplyDeleteMr. Haleem you are correct.Muslims cannot behave like how Gnanasara behave. Rhetoric speech make no purpose but make more enemy and more problem.We must be calm and try to solve the problem through discussion.Mr Hisbullah, is opportunist who stood by the side of Mahinda during the Presidential election in 2014 did not utter even a one word against BBS or Mahinda but now talking not behalf of Muslims but to facilitate Mahinda.But this is also the work of Mahinda that he wants to make problem for the government and topple the Government.
ReplyDeleteingratitude President that he was elected to defeat the Mahinda and Gotabaya.But now Gotabaya is his close friend and his speech against FCID and closeness to Gotabaya gave encouragement to BBS. President is more concern about the SLFP and his former colleague than country and it's peace.
It is the time to encourage the people who come forward and give voice. Rather not doing duty politics, we Muslim not stupid.
ReplyDelete