Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் குருடர்களா..? கண்ணீர் விட்டழுதார் அமீன்

தொல்பொருள் ஆராய்ச்சி பிரதேசமாக 250 வருடங்கள் பழமைவாயந்த பொத்தானை அமீருல் ஜப்பார் ஹமதானி பள்ளிவாசலும், அதனுடன் இணைந்த சியாரமும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிக்குள் உள்செல்லவும் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது

இவ்வாறான நிலையில் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இதுபற்றிய மௌனம் குறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான என்.எம். அமீன் தனது வேதனைகளை ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், வேதனைதாங்க முடியாமல் கண்ணீர் விட்டழுதார்.

அவர் மேலும் கூறுகையில்,

பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வின் இல்லம். அக்கறைப்பற்று எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொத்தானை பள்ளிவாசல் 250 வருடங்கள் பழமைவாயந்தது. 250 வருடங்களாக தொல்பொருள் பகுதியாக இல்லாத அந்தப் பள்ளிவாசல், எப்படி தற்போது தொல்பொருள் பகுதியானது..?

குறித்த பள்ளிவாசலுக்குள் உட்புக முடியாது தடை விதித்துள்ளார்கள். பள்ளிவாசலுக்குச் செல்ல தடை விதிப்பதற்கு இவர்கள் யார்..? மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில்கூட இந்த அக்கிரமம் நடைபெறவில்லை.

முஸ்லிம்களின் பூர்வீகப் பகுதி பள்ளிவாசல் பட்டப்பகலில், தொல்பொருள் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டும் முஸ்லிம் முஸ்லிம் அரசியல்வாதிகள் குருடர்கள் போன்று செயற்படுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் எத்தனை முஸ்லிம் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்..? முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எங்கே..?

இந்த அக்கிரமம் நடந்து, சில நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இதுநேரவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் அல்லது கிழக்கு மாகாண அரசியல்வாதிகளும் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், ஏன் கண்களை மூடிக்ககொண்டார்கள். ஏன் குருடர்களாகிவிட்டார்கள்...?

குறித்த அல்லாஹ்வின் இல்லத்தை பார்வையிட இதுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் செல்லாமையும், அவர்கள் இதுபற்றி பேச பின்நிற்பதையும் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

இவர்கள் ஏன் இந்த முஸ்லிம் சமூகம் மீது ஆர்வமற்று உள்ளார்கள்...?

முஸ்லிம் சமூகத்திடமிருந்து வாக்குகளை கொள்ளையடிப்பது மட்டுமா, இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் பணி..? 

நாளை தமது வீடுகளையும், சொத்துக்களையும் இந்த அரசாங்கம் அல்லது அதன் கீழ் செயற்படும் திணைக்களங்கள் தொல்பொருள் பகுதியென பிரகடனப்படுத்தினால், நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்படி மௌனம் காத்து நிற்பார்களா எனவும் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் நியாயபூர்வமான கேள்வியையும் எழுப்பினார்.

9 comments:

  1. There is no.difference between Assada..Sisi and Sri Lanka Muslim politicians all are same..to protect their interest at the expense of their community interest

    ReplyDelete

  2. முஸ்லிம்களின் பூர்வீகப் பகுதி பள்ளிவாசல் பட்டப்பகலில், தொல்பொருள் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டும் முஸ்லிம் முஸ்லிம் அரசியல்வாதிகள் குருடர்கள் போன்று செயற்படுகிறார்கள்

    ReplyDelete
  3. Well said Brother Atteeq Abu, Alhamdulillah. This is another “DRAMA” staged by a prominent Muslim journalist and so-called Civil Society leader. Throughout the years these deceptive, hoodwinking personalities have been working against the interest of the Muslim community in Sri Lanka. The Muslim Council of Sri Lanka is a handful of fellows who call themselves the representatives of the Muslim Organizationand they are an illegal body. They have only formed an “Ad-hoc” group that claims recognization for the Muslim Community, but actually it is for themselves. Even during the Mahinda Regime these fellows did the same. These fellows are “POLITICAL HYNAS”. Let them deny that they were NOT benefited by the Mahinda Rajapaksa regine during his goveerments saying that they are the “poer of the Muslim voters”. Now they have been enjoying same benefits showing similarities of the Muslim “power”, for their benefits. It is, as a result of all these deceptions, Muslims in Sri Lanka do NOT have a voice – a POLITICAL VOICE for that purpose.The Yahapalana government (President Maithripala Sirisena and PM Ranil Wickremaratne) have forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power, Insha Allah. That may be the bestpolitical option now, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  4. Ameen has misunderstood about the Muslim Parties, Muslim MPs and Muslim Ministers. We knew that they are real Jokers and working for their benefits.

    ReplyDelete
  5. Muslims labelled leaders are useless... They always think about their pockets... at the end of the day they will release the useless statement... utter nonsense...

    ReplyDelete
  6. எதிர்கால முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதத்திற்கான தகுதியை இவ்விறை வாசனத்திதிலிருந்தும் பெறலாம்:

    'அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.'
    (அல்குர்ஆன் : 9:18)

    ReplyDelete
  7. Muslims have only one choice right now ! VOTE TO JVP and
    help them increase their power base . We might lose but
    still , clearly our reaction this way will help shaking
    the traditional power base and we get an opportunity to
    test a new force . Nothing like trying a change and now
    is the time for it . It is high time to hit hard .

    ReplyDelete
    Replies
    1. If we have to support JVP, they must publicly oppose BBS and it's kind of fanatic racists from now, to authenticate them before we vote and recommend them to others.

      Delete
  8. Mr.muzammil I agree with you.
    This time we have to give a chance to them. Because I see them they help to us most of way.

    ReplyDelete

Powered by Blogger.