Header Ads



தன்னுடைய சம்பளம் தெரியாத அமைச்சர், மனைவியே சட்டைப்பையில் பணத்தை வைப்பா..!

எனக்கு என்னுடைய சம்பளம் எவ்வளவு என எனக்கு தெரியாது. எனது மனைவி என்னுடைய சட்டைப் பையில் பணத்தை வைப்பார். அதனையே நான் செலவு செய்து வருகின்றேன் என அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை எதிர்த்து பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார். அதனைப் போன்று ஏன் நீங்களும் இருக்கக் கூடாது? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

நாங்கள் இப்போது வயதானவர்கள். எங்களால் ரஞ்ஜனைப் போன்று கஷ்டமான வாழ்க்கை வாழ முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. நகைச்சுவை.

    ReplyDelete
  2. APPA NAMMA NAATTU PODUMAKKAL ENNA KASTHAM????

    ReplyDelete
  3. ivarukku eppayum pakadithan thanathu sampalam theriyatha oru manthirikku nattu makkalin sampalam ulaippu ellam eppadi theriyum ippellam niraya par maniviya vachchithan niraya lanjem vankuranka.

    ReplyDelete

Powered by Blogger.