பௌத்தத்தை உலகெங்கும் பரவச்செய்ய, அரசாங்கம் உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படும்
தேரவாத பௌத்த தத்துவத்தை உலகெங்கும் பரவச் செய்வதற்கு அரசாங்கம் உயர்ந்தபட்சம் அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று கொப்பேகடுவ, நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட வழிபாட்டு கூடத்தை சாசனத்துக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளாந்தம் வழிபாடுகளில் ஈடுபட்டாலும், மதபோதனைகளுக்கமைய வாழ்வதனூடாக மட்டுமே நல்ல மனிதர்கள் உருவாகுவார்களென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதர்கள் மதபோதனைகளை வாழ்க்கையில் பின்பற்றாமை காரணமாகவே சமூகம் சீரழிந்து போவதாகவும் குறிப்பிட்டார்.
மனக்கலக்கமுடைய மனிதர்கள் பௌத்த தர்மத்தினூடாக நிம்மதியடையலாம் எனவும் தற்போது மேற்குலகமும் பௌத்த தத்துவம் தொடர்பில் கூடுதலாக அக்கறை காட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நெல்லிகல ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மதகுருமார்களைத் தரிசித்து நலன் விசாரித்ததுடன், அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வறகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரருக்கு காணிக்கைகளை வழங்கி, ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வின் ஞாபகார்த்தமாக விகாரை வளாகத்தில் நெல்லி மரமொன்று ஜனாதிபதினால் நடுகை செய்யப்பட்டது.
நெல்லிகல பௌத்த நிலையத்தின் நிறுவுனர் சங்கைக்குரிய வதுறகும்புறே தம்மரதன தேரரால் உலோகத்திலான புத்தபிரானின் திருவுருவமும் பௌத்த சாசனத்துக்கு ஜனாதிபதி ஆற்றும் பணியைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவினால் நினைவுப் பரிசும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
விகாரை நிர்மாண பணிகளில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்காக பரிசில்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
கண்ணியமிக்க ஜனாதிபதி அவர்களே அதிகமான மக்கள் இன்று மார்க,மத போதனைகளிலிருந்து அவர்களின் வாழ்கையை தூரமாக்கிவிட்டார்கள் அதனால் அனைத்து பெரும்தீமைகளும் சமூகத்தில் புயலாய் வீசுகின்றது இதை கவனத்தில் எடுத்து மக்களை நல்வழிபடுத்த நற்பண்பிகளை சொல்லி கொடுப்பதற்கு உருவாக்கப்பட்ட அறகட்டளைகளையும்,நன்மாறாய இஸ்தலங்களையும்,இஸ்லாமிய மதுரசாக்களையும் மூடவேண்டமென்று மொட்டயடித்து காவியாடை அணிந்த பௌத்த தேரர்கள் ரௌவுடிதனம் செய்யும்போது எவ்வாறு பௌத்த நட்பண்புகளை உலகெங்கும் எவ்வாறு பரப்புவீர்!மேலும் உங்களுக்கு தெரிந்த நற்பண்புகள் கூட அதிமான இலங்கை பௌத்த தேரர்களுக்கு தெரியவில்லையே!
ReplyDeleteஇன்று இலங்கையில் உள்ள பௌத்த கோயில்களுக்கு சென்று தேரர்களிடம் பௌத்தமத்தை படிப்பதற்கு அவர்களிடம் பௌத்தரையும் அவரின் போதனைகளயும் ஆதாரத்துடன் உள்ளடங்கிய புத்தங்களை தாருங்கள் என்று கேட்டோம் அதற்கு அவர்கள் கூறியபதில் அப்படி ஆதாரத்துடன் எந்தவொரு புத்தகமும் எங்களிடம் இல்லை என்றார்கள் பின்பு பல்லாயிரம் ஆண்டுகள் வாய்வழியாகவந்த பௌத்தபோதனைகள் அரசர்களின் வாழ்கையுடன் திரிபுபடுத்தப்பட்டுவிட்டது என்று உண்மையை கூறினார்கள் பௌத்தர் என்னதை சொன்னார் என்று கூட கூறமுடியாமல் ஆகிவிட்டார்கள் இதுதான் பௌத்தமத்தின் நிலைமை இந்த உண்மையை சொன்ன பௌத்த தேரர்களுக்கு நன்றிகள்
ReplyDeleteஎதெற்கு சார் உங்களுக்கு அந்த கஷ்டம்? அதைத்தான் மியான்மாரிலிருந்து "விராத்" என்ற தேரரும் நம்ம நாட்டிலிருந்து ஞானசேர தேரரும் அழகா பரப்புறாங்களே! .... கோவிச்சுக்காதீங்கோ... நீங்க அவங்களுக்கு ஆதரவு காட்டுறப்போ அவங்க சொல்றது, செய்ரது தானே உங்களைப்பொறுத்தவரை உண்மையான பௌத்தமாக இருக்கவேண்டும்!
ReplyDelete