Header Ads



கிறிஸ்மஸ் வாழ்த்துச் சொல்லாத, முஸ்லிம் சகோதரி மீது தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செல்லாத முஸ்லீம் பெண் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வணிக வளாகம் ஒன்றிற்கு முஸ்லீம் பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் 'Merry Christmas' என்று கூறுமாறு தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் அவருக்கு 'happy holidays' என்று பதிலளித்தார்.

'Merry Christmas' சொல்ல சொல்லி அந்த பெண்ணை அந்த நபர் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்த நிலையில், அவரின் மதத்தை பற்றி அசிங்கமாக பேச ஆரம்பித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அந்த மர்மநபர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அந்த முஸ்லீம் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த பெண் அணிந்திருந்த முக்காடை அவிழ்த்த அவர் அதனுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அவுஸ்திரேலியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்பில் புகார் கொடுத்துள்ளார்.

2 comments:

  1. So who is extremist?

    ReplyDelete
  2. இப்படியானவனைதான் ட்ரைலரின் டயருக்குள்போட்டு நசுக்கணும்.

    ReplyDelete

Powered by Blogger.