சீனா கவலையடைகிறதாம், - நேரடியாக மைத்திரியிடம் தெரிவிப்பு
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு விடயத்தில் இரகசிய தரகு இடம்பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜேவிபி, கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சீனா அதிருப்தி அடைந்துள்ளது.
குறிப்பாக, சிறிலங்கா அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஜாதிக ஹெல உறுமய, அம்பாந்தோட்டை உடன்பாட்டுடன் தொடர்புடைய சில அமைச்சர்கள், சீனாவுக்குச் சென்று தரகுப் பணம் பெற்றதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது தொடர்பான சீனாவின் கவலையை சிறிலங்கா அதிபரிடம், நேரில் தெரிவித்துள்ளார் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்.
Post a Comment