இலங்கை சிவசேனை, அமைப்பின் அறிக்கை
புத்த சாசன அமைச்சின் விதிகளுக்கு அமையப் புராதன இந்துக் கோயில்களில் திருப்பணி செய்வதற்கு அனுமதி எவரிடமும், எப்பொழுதும் அனுமதிப் பெற வேண்டியதில்லை என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார் .
திருக்கோணேச்சரம் அன்னதான மடம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அறங்காவலர் அருள் சுப்பிரமணியம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்து இன்று (28) அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலையின் மூத்த குடிமகன், எழுத்தாளர், கவிஞர், படைப்பாளி அருள் சுப்பிரமணியம் அவர்கள். அவர் மேல் சட்ட நடவடிக்கை என்பது இலங்கையில் வாழும் இந்துமக்கள் மீதான சட்ட நடவடிக்கைக்கு ஒப்பானதாகும்.
திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் திருக்கோணேஸ்வரம் ஆலய அறங்காவலராக இருந்தவர். சிறந்த இந்துவான அவரும் அருள் சுப்பிரமணியம் மீதான சட்ட நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இந்துக்கள் இலங்கையில் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்குரிய சூழ்நிலையில்லை என்பதை உலகெங்கும் வாழும் இந்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களாக.
அருள் சுப்பிரமணியம் மீதான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயல்வதைச் சிவசேனை கடுமையாகக் கண்டிப்பதை உறுதி செய்கிறது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
Sivsena is terrorist organisation, why gov is not taking any step to ban sivsena...
ReplyDeleteஇலங்கயில் ஏதும் தீவிரவாத பாணியில் நடந்துகொண்டால் கணிடிப்பாக தடைசெய்யவேண்டும், தங்கள் சமூகத்தை முன்னேற்றும் முயற்சியாக அவர்களது பாதை இருந்தால் மற்றவர்களின் தலையீடு தேவயற்றது. (இதுவரை நான் இந்த சி, சேனா பற்றி தவறான பாணியில் செவியுற்றதாக நினைவில்லை...)
ReplyDelete