அலோப்போ குழந்தைகளின் குரல்
-Mohamed Nizous-
எங்களுக்கு
ஷீயாவும் தெரியாது
ஷுன்னியும் புரியாது
தாயை இழந்ததன்
தவிப்புதான் எரிகிறது.
வீடு வாசல் அழிந்து
வீதி வாழ்க்கையில் விழுந்து
வாடுகின்ற எங்களுக்கு
வாய்க்குணவு தராது
சித்தாந்தம் பேசுவதால்
சித்தம் கலங்கி நிற்கின்றோம்.
அடக்கியவனுக்கு எதிராய்
தொடக்கிய யுத்தத்தில்
தோல்வியாலும் வெற்றியாலும்
துவம்சமான எங்களுக்கு
நசுக்கிய கொடுமையிலும்
பசிக் கொடுமை பெரிது இப்போ.
வாப்பா இல்லாமல்
வாடுகின்ற நிலையில்
கூப்பாடு போட்டு
கொள்கை விளக்குவதிலும்
சாப்பாடு தாருங்கள்
சண்டையை நிறுத்துங்கள்.
அடுத்த நாடுகளில்
ஆங்காங்கே ஒரு சிலர்கள்
கெடுக்கும் இனவாதம்
கிளர்ந்து பேசுவதால்
தொடுக்கணும் போர் என்று
துடிக்கும் ரத்தங்களே
தூர சிந்திப்பீர்
ஆராய்ந்து செயற்படுவீர்
போரால் நொந்து போய்
புலம்புவதாய் எண்ணாதீர்
தீராது பிரச்சினைகள்
தீவிர வாதத்தால்.
ஷீயாக்கு சப்போர்ட் என்று
சினந்தெழுவார் சிலபேர்கள்.
போயாக்கு பன்சலைக்கு
போவோமா எனக் கேட்பார்.
கொள்கை சரியென்று
கூற வரவில்லை
உள்ள நிலைமையினை
உணர்ந்து செயற்படுவீர்.
யாஅல்லாஹ் எம் சகோதரர்களை பாதுகாப்பாயாக.
ReplyDelete